மோகன்லால் நடிக்கும் படம் ‘ஆபரேஷன் கங்கா’

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் “ஆபரேஷன் கங்கா” படத்தை விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி.பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். ரஷ்யா – உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆபரேஷன் கங்கா’ மீட்புப் பணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுடன் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள்.*******

இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. மோகன்லால் விரைவில் படப்பிடிப்பில் இணைகிறார். மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலந்து, ஜார்ஜியா, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. வெளிநாடு மற்றும் பாலிவுட்டை சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக ‘ஆபரேஷன் கங்கா’ உருவாகி வருகிறது. இப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, ‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபல இசையமைப்பாளர் ஷாஷ்வத் சச்தேவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘ஆபரேஷன் கங்கா’ படத்தின் தொழில்நுட்பக் குழு: ஒளிப்பதிவு – மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக் இசை – ஷாஷ்வத் சச்தேவ் ஆக்ஷன் இயக்கம் – சே யங் ஓ புரொடக்‌ஷன் டிசைன் – ராஜீவன் எடிட்டிங் – ஷமீர் முகமது சவுண்ட் டிசைன் – பிஷ்வதீப் சட்டர்ஜி VFX மேற்பார்வை – கே.வி. சஞ்சித் மிலிட்டரி ஆலோசகர் – Squadron Leader Verlin Panwar காஸ்ட்யூம் டிசைன் – மெல்வி ஜே மேக்கப் – ரோனெக்ஸ் சேவியர் புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் – ரின்னி திவாகர் மக்கள் தொடர்பு – சதீஷ் குமார், S2 மீடியா