டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு – தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அறியுறுத்தல்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திட பொதுமக்கள், தங்களது குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு சாரா அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், தொழில் சாலைகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் தண்ணீர்  தேங்கும. வகையில் உள்ள பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தொட்டிகள் மற்றும் தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அழிப்பதுடன், தண்ணிர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் கொசுப்புழு உற்பத்தியாகாத வகையில் மூடிவைக்க வேண்டும். தங்களது வளாகத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்துக் கொள்ள வேண்டும். மேலும் கட்டுமான நிறுவனங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால், ரூ.10,000/- முதல் ரூ.1,00,000/- வரை அபராதம் விதிக்கப்படும்.  மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தங்களது வளாகத்தை ஆய்வுசெய்யும் பொழது டெங்கு ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் குடியிருப்பு  நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது, காய்ச்சல் பாதிக்கப்பட்டால், உடனடியாகஅருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைபெற்றுக் கொள்ளவும். காய்ச்சல் குறித்து -1800 425 4355 இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். எனவே பொதுமக்கள் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திட மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தங்க முகையதீன்-