தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சி செல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார். இத்தொடக்க விழாவில் நடிகர் ஜெய் பேசியதாவது.., “இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் குறிஞ்சி செல்வனுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிஞ்சி செல்வன் என்றாலே எனக்கு ஜப்பான் என்றுதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரை ஜப்பான் குறிஞ்சி என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் நல்ல மனம் கொண்டவர். அவருடைய தயாரிப்பில் முதல் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.******

இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக வேண்டும் என்பதற்காக இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்து வருகிறோம். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் கூடுதல் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் அனைவரும் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பதால், இந்தப் படம் எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாக உருவாக வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். தயாரிப்பாளர் இந்த முயற்சியில் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் இன்னும் பல இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும். இந்தப் படம் நல்ல முறையில் வெளியாக அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” நன்றி