இரு மொழிகளில் பாடல்கள் படைக்கும் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன்

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாடல்களை எழுதி, அவற்றை வலையொளி தளத்தில் வெளியிட்டு வரும் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன், பாடல் இலக்கியத்தின் வழியாகப் பல்வேறு கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். காதல், வாழ்க்கை அனுபவங்கள், மனிதநேயம், சமூக விழிப்புணர்வு, சமத்துவம், தன்னம்பிக்கை, இயற்கை மற்றும் உறவுகளின் மேன்மை உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் இவர் பாடல்களைப் படைத்து வருகிறார். சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதுடன், மனிதநேயத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் கருத்துகளுக்கும் தனது படைப்புகளில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.  தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பாடல்களை உருவாக்கி வெளியிடுவது இவரது படைப்புப் பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.*******

உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கத் தமிழரான, சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றுபவரான  *நவநீதம் “நவி” பிள்ளையைப்* போற்றும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடல்களை எழுதியுள்ளார்.