‘கிங் 100’ திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. ர.கார்த்திக் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ‘கர்ணா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் முதல் பதாகை வெளியாகியுள்ளது. இதில் அவர் ஒரு விதமான தீவிரமான மற்றும் மிரட்டலான தோற்றத்தில் காட்சி தருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப் பதாகை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.********
அசோக் செல்வன் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான தோற்றத்தில் அசத்துகிறார். ஸ்டைலான மெரூன் நிறச் சட்டை அணிந்து, நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன் நாற்காலியில் மிகவும் இயல்பாகவும், அதேசமயம் மிரட்டலான தோரணையிலும் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் சிகரெட், அருகில் அலட்சியமாக வைக்கப்பட்டிருக்கும் காக்கி நிறக் காவல்துறை சீருடை மற்றும் முன்புறத்தில் ‘கிங்’ (King) எனும் சதுரங்க விளையாட்டின் தலைமைக்காயுடன் கூடிய சதுரங்கப் பலகை என இந்தப் போஸ்டரில் பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புகை மூட்டமான சூழலும், இருண்ட பின்னணியும் படத்திற்கு ஒரு மர்மமான ஈர்ப்பை அளிக்கின்றன.
அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை இதுவரை பார்த்திராத ஒரு புதிய அவதாரத்தில் படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த மாற்றம் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்திற்கு கூடுதல் சுவாரசியத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றும் கதையில் அதன் முக்கியத்துவம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை நவீன் நூலி கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக N. சதீஷ்குமார் பணியாற்றுகிறார்.

