மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார்அவர்கள், இன்று (14.11.2026) செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-4க்குட்பட்ட பகுதிகளில் பேருந்து நிழற்குடை கட்டுமானப் பணி, நகர் நலமையத்தில் டயாலிசிஸ் மையம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், மழைநீர் வடிகால்பணி, பூங்கா, விளையாட்டு அரங்கம், முதல்வர் படைப்பகம், பொன்னியம்மன் கோயில் குளம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-4, வார்டு-49க்குட்பட்ட மேற்கு தாம்பரம், தாம்பரம் ஜிஎஸ்டிசாலையில் பேருந்து தடம் எண்.66ல் இயக்கம் மற்றும் பராமரிப்பு பற்றாக்குறை மானிய நிதியில் ரூ.7.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேருந்து நிழற்குடைகட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வார்டு-50க்குட்பட்ட வள்ளுவர் குருகுலம் பள்ளியின் பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், வார்டு-50க்குட்பட்ட மேற்கு தாம்பரம், இரங்கநாதபுரத்தில் உள்ள நகர்நல மையத்தில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் மையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயன்பெறுபவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ச்சியாக, சாமியார் தோட்டம் பகுதியில் உள்ள பொது கிணற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, கிணற்றினை தூர்வாரி தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், வார்டு-32க்குட்பட்ட அற்புதம் நகரில் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடத்தினைப் பார்வையிட்டு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிற வசதிகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், வார்டு-33க்குட்பட்ட தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பகுதியில் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ச்சியாக, வார்டு-51க்குட்பட்ட தேவநேசன் நகரில் உள்ள பூங்கா, வார்டு-54க்குட்பட்ட ஶ்ரீசாய் நகர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு அரங்கம், வார்டு-56க்குட்பட்ட பெருங்களத்தூரில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், வார்டு-57க்குட்பட்ட பெருங்களத்தூர், பொன்னியம்மன் கோயில் குளத்தில் ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி ஆணையாளர் திருமதி ரா.சரண்யாஇ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

