இருமொழிகளில் வெளியாகும் ‘போய்வா யானை குட்டியே போய்வா’

ஏ2பி2 புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்போய்வா யானை குட்டியே போய்வா’. தமிழ் தெலுங்க. என இரு மொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை கே.எஸ்.நாயக் இயக்கியுள்ளார். மறைந்த நகைச்சுவை நடிகர் மனோபாலா, பாகுபலி பிரபாகர், கோதண்டம், ஆசாத், தன்ராஜ், ரகுபாபு  ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இரண்டு யானைகளும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளன.*******

படம் குறித்து இயக்குனர்  கே.எஸ்.நாயக் கூறும்போது, “சிலருக்கு புதையல் குறித்த ஒரு வரைபடம்கிடைக்கிறது. அதுகுறித்து புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் கேட்க அவர் யானை ஒன்றை பலிகொடுத்தால் புதையல் உங்களுக்கு கிடைக்கும் என கூறுகிறார். அதன்படி வேட்டைக்காரன் துணையுடன்யானைக்குட்டி ஒன்றை அதன் தாயிடம் இருந்து பிரித்து கடத்தி வருகின்றனர். ஆனால் இரண்டு மாதங்கள்கழித்து சரியான நாளில் பலி கொடுத்தால் மட்டுமே புதையலை அடைய முடியும் என மந்திரவாதி ஒருவர் கூற, அதுவரை யானைக்குட்டியை பாதுகாக்கும் பொறுப்பை வேட்டைக்காரனிடம் ஒப்படைக்கின்றனர்.

யாருக்கும் தெரியாமல் வேட்டைக்காரன் அதை கட்டிப்போட்டு வளர்க்க, அவரது மகனான சிறுவன் அந்தயானைக்குட்டியுடன் நட்பாக பழக ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த யானைக்குட்டியை பலி கொடுக்கப்போகிறார்கள் என்கிற தகவல் அவனுக்கு தெரிந்ததும் அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தனதுநண்பர்களுடன் சேர்ந்து முயற்சியில் இறங்குகிறான். யானைக்குட்டியை அவனால் காப்பாற்றி அதன் தாயிடம்சேர்க்க முடிந்ததா என்பது தான் மீதிக்கதை

இதை திரில்லிங் கலந்து அதே சமயம் நகைச்சுவையுடன் குழந்தைகள் முதல் பெரியவர் வரை என அனைவருமேபார்த்து ரசிக்கும் விதமாக உருவாக்கி உள்ளோம். கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தாமல் ஷிமோகாகாட்டுப்பகுதியில் வனவிலங்கு நல வாரியத்தின் அனுமதி பெற்று நிஜமாகவே இரண்டு யானைகளை வைத்துகாட்சிகளை படமாக்கினோம். நடிகர் மனோபாலா இதில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவர்சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தரும்என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இயக்கம் ; கே.எஸ். நாயக் ஒளிப்பதிவு ; அசோக் ரெட்டி கௌஹல்லா இசை ; பீம்ஸ் சிசிரிரோலியோ படத்தொகுப்பு ; அசோக் பாடல்கள் ; கருப்பன், அருள் நடனம் ; ரிக்கி மாஸ்டர் தயாரிப்பு நிர்வாகி ; பூஜாரி பாஸ்கர் ராஜூ டிசைன்ஸ் ; வெங்கட் RK மக்கள் தொடர்பு ; KSK செல்வா