விநாயக் வைத்தியநாதன் மற்றும் அக்ஷயா உதயகுமார் இணைந்து நடித்துள்ள காதல் இசை காணொளியை அவுர் ஈக் ப்ளவர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆதித்யா கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார். இந்த இசை காணொளியை டிவோ வலையொளி தளத்தில் வெளியாக உள்ளது. ராகுல் அசோக் குமார் இயக்கியுள்ள “ப்லூம்” வெறும் இசை காணொளியாக மட்டுமல்லாமல், ஒரு நாளின் காலப்பகுதிக்குள் காதல், மாற்றம், நினைவுகள் மற்றும் மனிதர்களுக்கிடையேயான தற்காலிகமான உணர்வுப் பிணைப்புகளை அழகாக வெளிப்படுத்தி மனதைத்தொடும் ஒரு காட்சி அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ப்லூம்”தொகுப்பை ராகுல் அசோக் குமார் இயக்கியுள்ளார்.*****
தொழில்நுட்பக் குழு: இயக்கம் – ராகுல் அசோக் குமார் இசையமைப்பு – பரத் தனசேகர் நடிப்பு – விநாயக் வைத்தியநாதன் & அக்ஷயா உதயகுமார் ஒளிப்பதிவு – அருண் VJK படத்தொகுப்பு – பவித்ரன் நடன அமைப்பு – ரிச்சர்ட் சன் தயாரிப்பு – ஆதித்யா கிருஷ்ணமூர்த்தி (Aur Ek Flower’s. PRO – ரேகா

