கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான மாடத்தி திரைப்படம் ஜூன் 24 அன்று வெளியாகிறது.

18 ஜூன், 2021:லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி திரைப்படத்தின் முன்னோட்டம்/Trailer சினிமா, இலக்கியம், கலை, அரசியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தஆளுமைகளால் பிரம்மாண்டமாக வெளியிடப் படுகிறது. ஷைலஜா டீச்சர், மஞ்சு வாரியர், பிரித்விராஜ் சுகுமாரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி மேனன், கீது மோகன் தாஸ், சேரன், ஆஷிக் அபு, பா ரஞ்சித், வசந்தபாலன், சி எஸ் அமுதன், ரீமா கல்லிங்கள், நீரஜ் கய்வான், தமிழச்சி தங்கபாண்டியன், என். எஸ். மாதவன், ரோஹிணி, எஸ்.ஆர். பிரபு, டி.எம். கிருஷ்ணா, ஷோபா சக்தி உட்பட பல கலைஞர்களும், அரசியல் தலைவர்களும்செயல்பாட்டாளர்களும் படை திரண்டு மாடத்தியின் முன்னோட்டத்தை தத்தமது சமூகவலைத் தளங்களில் வெளியிட்டனர். லீனா மணிமேகலை எழுதி, இயக்கி, தன் நிறுவனமானகருவாச்சி ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாக்கியிருக்கும் மாடத்தி ஜீன் 24 முதல் நீஸ்ட்ரீம்ஓடிடி தளத்தில் திரையிடப்பட உள்ளது “ஏதிலிகளுக்குத் தெய்வமில்லை. அவரே தெய்வம்” என்ற மேற்கோளுடன் வரும் இப்படம்தமிழ்நாட்டின் தென்கோடியில், ‘காணத்தகாதோர்‘ என்று அடையாளப்படுத்தப்படும் புதிரைவண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப்பேசுகிறது. தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய்துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமானஅடக்குமுறைகளை இப்படம் தோலுரிக்கிறது. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்றுகருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவலநிலைக்குள்ளாகிய  இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதிஅடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்துஅவதானிக்கும் ஒரு உக்கிர தேவதையின் கதை மாடத்தி. இன்று வெளியாகியிருக்கும்முன்னோட்டம்  அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தில் பிறந்த பெண் எப்படிதனக்கிழைக்கப்பட்ட அநீதியால் உக்கிர தெய்வமாகிறாள் என்ற கதையின் மிகத்துல்லியமான காட்சி குறுக்குவெட்டாய் அமைந்திருக்கிறது. சாதி அடுக்குகளின் கடைசிமனுசியாய் வாழும் ஒரு பெண் சாதியையும் பாலின அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதை ஒரு பெண்ணின் பார்வை கொண்டு மாடத்தி திரைப்படம் காட்சிப் படுத்தியிருப்பதைமுன்னோட்டம் கட்டியம் கூறுகிறது. லீனா மணிமேகலை சமூக நீதி குறித்த கருத்துக்களை கவித்துவமான அழகியலுடன்பேசும் கலைப்படைப்புகளுக்காக பெயர் பெற்றவர்.  பலதரப்பட்ட பாணிகளிலான இவரின்படைப்புகள்  உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப்பெற்றிருக்கின்றன. லீனா மணிமேகலையின் சிறந்த  படைப்புகளான  Goddesses (2009), செங்கடல் (Cinema Verite 2011), My Mirror is the Door (2012, Cine Poem), White Van Stories (2015, Feature Documentary) மற்றும் Is it too much to ask (2017, Mockumentary) ஆகியவை இவரை ஒரு தனித்துவமிக்க தனித்திரை ஆளுமையாக நிலைநாட்டி உள்ளன.   …

கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான மாடத்தி திரைப்படம் ஜூன் 24 அன்று வெளியாகிறது. Read More

ஆனந்தம் விளையாடும் வீடு” அனைவரையும் உருகவைக்குமென்கிறார் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”  படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  தற்போது வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. 40 க்கும் …

ஆனந்தம் விளையாடும் வீடு” அனைவரையும் உருகவைக்குமென்கிறார் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி Read More

மெமரீஸ் படத்தின் டீசர் வெளியானது

ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த  படமான  மெமரீஸ் படத்தின் டீசர் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இசையமைப்பாளர் டி. இமான்  மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. வெளியான சில …

மெமரீஸ் படத்தின் டீசர் வெளியானது Read More

நான், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மிகப்பெரிய விசிறியென்கிறார் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் ட்ரெய்லரை  Netflix கடந்த வாரம் வெளியிட்டது. வெளியான கணத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற  ட்ரெய்லர், இணையம் வழியே, உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் கார்த்திக் …

நான், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மிகப்பெரிய விசிறியென்கிறார் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் Read More

திரைப்பட பாடலாசிரியர் ஆகுவதற்க்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்

திரைப்பட பாடலாசிரியர் ஆவது உங்கள் இலட்சியமா? உங்கள் கனவை நனவாக்க இயக்குநர் வசந்தபாலனின் வண்ணமிகு போட்டி. தனது நண்பரும் மறைந்த கவிஞருமான நா.முத்துக்குமார் நினைவாக, தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இது குறித்த அவரது …

திரைப்பட பாடலாசிரியர் ஆகுவதற்க்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன் Read More

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய  படம்

வணக்கம் சென்னை, காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது Rise East Entertainment தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் …

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய  படம் Read More

தராதிபன் படத்தின் அறிமுகப் பதாகை வெளியீடு

சக்தி ஃபிலிம் பேக்டரி பிரபல டிஸ்டிபியூட்டர் சக்தி வேலன் ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள தராதிபன் படத்தின் அறிமுக பதாகையை வெளியிட்டுள்ளார் ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அபி சரவணன் வழங்கும் தராதிபன் படம் ஒரு திரில்லர் …

தராதிபன் படத்தின் அறிமுகப் பதாகை வெளியீடு Read More

கொரோனா நிவாரண நிதி – சூரி

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் திரு.சூரி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் …

கொரோனா நிவாரண நிதி – சூரி Read More

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கதாபாத்திரம் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்

அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற  ” சிட்டிசன்” படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. ” கந்தர்வன்”  “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ். மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் …

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கதாபாத்திரம் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம் Read More

விருதுகளை நோக்கி பயணப்படும் தகவி

” ஆறடி” என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிடமும் பாராட்டையும், பல விருதுகளையும், வாழ்துக்களையும்  பெற்ற படக்குழுவினர் அடுத்து ” தகவி” என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர்.  “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ….. …

விருதுகளை நோக்கி பயணப்படும் தகவி Read More