காவலர்கள் குறை தீர்க்கும் நாள்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறைரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள்குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர்ஜிவால், இ.கா.ப  தலைமையில், நேற்று (02.10.2021) சென்னை, எழும்பூர், …

காவலர்கள் குறை தீர்க்கும் நாள் Read More

ரூ. 22.31 லட்சம் மதிப்பில் 390 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய்த்தில் பறிமுதல் பயணி கைது

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் 17.09.2021 அன்று இரவு 9 மணிக்கு ஏர் அரேபியா  ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது முழுக்கால்சட்டை பையில் மறைத்து …

ரூ. 22.31 லட்சம் மதிப்பில் 390 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய்த்தில் பறிமுதல் பயணி கைது Read More

வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல்

வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் போலந்து நாட்டில்இருந்து வந்திருந்த  பார்சல் ஒன்றில் ஒட்டுண்ணி வகைஉயிரினம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்அடிப்படையில் அதனை சென்னை விமான நிலையசுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தகஜுலகா என்பவருக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதனைப் பிரித்து பார்க்கையில், தெர்மாகோல் பெட்டிஒன்றில் 10 சிறிய நெகிழிக் குப்பிகள்  பருத்தி மற்றும்வெள்ளிக் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.  அதனை மேலும் சோதனையிட்டதில் ஒவ்வொருகுப்பிக்குள்ளும் உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள்இருப்பது தெரியவந்தது. சிலந்திகளை சோதனையிட்டவிலங்கு தனிமைப்படுத்தல் அதிகாரிகள், அவை இறக்குமதிசட்டத்திற்கு புறம்பானது என்பதாலும், வெளிநாட்டு வர்த்தகஉரிமம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை என்பதாலும், சிலந்திகளை அவை எந்த நாட்டிலிருந்து வந்தனவோ, அங்கேயே அனுப்பி வைக்குமாறு  பரிந்துரைத்தனர். சுங்கச் சட்டம் 1962-ன் படி சிலந்திகள் பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர் சிலந்திகள் அடங்கிய பார்சல்போலந்திற்கு திருப்பி  அனுப்பப்படுவதற்காக தபால்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மதிப்பீட்டுதுறை பல்வேறு போதைப் பொருட்கள் அடங்கியபொட்டலங்களையும் கண்டறிந்துள்ளது. 274 கிராம் கஞ்சாஅடங்கிய 3 பார்சல்கள், எம்டிஎம்ஏ மாத்திரைகள், மெதாம்ஃபெடமைன், அம்ஃபெடமைன், சராஸ் உள்ளிட்ட 92 கிராம் எடை கொண்ட போதை பொருட்கள் அடங்கிய 5 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இந்த பார்சல்கள்போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அஞ்சலில் வந்த உயிருள்ள 10 அரியவகைசிலந்திகள் சென்னையில் பறிமுதல் Read More

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1.34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். கொச்சின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அளித்த உளவுத் தகவல் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ விமானத்தில் இன்று அதிகாலை 2.20 …

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல் Read More

கொடநாடு பங்களாவில் ஆதாரங்களை திரட்டிய போலீசார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடுபங்களாவில் நடந்தகொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் சயானிடம் மறு விசாரணை, கனகராஜ்சகோதரிடம் விசாரணை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கொடநாடு எஸ்டேட்மேலாளர் என பலரிடமும் போலீசார் மேற்கொண்டு வரும் …

கொடநாடு பங்களாவில் ஆதாரங்களை திரட்டிய போலீசார் Read More

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது.

சென்னை, மடிப்பாக்கம், ராமகிருஷ்ணராஜ் நகரைச்சேர்ந்த கீதா, பெ/வ.58, க/பெ.கபிலன் என்பவர் கடந்த19.8.2021 அன்று மாலை, வீட்டினருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியைபறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கீதா S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. ​​S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவுஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவஇடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராபதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. ராஜேஷ் (எ) ராபர்ட், வ/23, த/பெ.வின்சென்ட், எண்.25, ஏரிக்கரை தெரு, ஜமீன்பல்லாவரம், சென்னை, 2.சிவா (எ) சிவசங்கரன், வ/26, த/பெ.ஶ்ரீராம், எண்.64, பத்மாவதிநகர் 2வது குறுக்கு தெரு, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், 3.லியோ (எ) லியோனார்டு ஜேம்ஸ், வ/28, த/பெ.டேனியல்ஜேம்ஸ், எண்.19/40, சிதம்பரம் தெரு, பாரதிபுரம், ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை, ஆகிய 3 நபர்களை கைதுசெய்தனர்.​ ​​விசாரணையில் குற்றவாளிகள் மூவரும் S-7 மடிப்பாக்கம், S-10 பள்ளிக்கரணை, S-15 சேலையூர், S-6 சங்கர் நகர் மற்றும் S-5 பல்லாவரம் ஆகிய  காவல் நிலையஎல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தனியாகநடந்து செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலிகளைபறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும்குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 டியோ இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில், குற்றவாளி ராஜேஷ் (எ) ராபர்ட்மீது மடிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற காவல் நிலையஎல்லைகளில் சுமார் 10 செல்போன் பறிப்பு வழக்குகள்உள்ளது தெரியவந்தது. ​​விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் இன்று(29.8.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது. Read More

பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 32). பால் மற்றும் பேப்பர் போடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பாலவாக்கம் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ரூ.1½ லட்சத்தை எடுத்தார். அதை தனது இருசக்கர வாகன இருக்கைக்கு …

பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி Read More

காவல் கரங்கள் ”  உதவி மையம் மூலம் வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

​சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  “காவல் கரங்கள்” என்ற அமைப்புஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “காவல் கரங்கள்” மூலம்சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஆதரவில்லாமல் சுற்றிதிரியும் மனநிலை மற்றும் உடல் …

காவல் கரங்கள் ”  உதவி மையம் மூலம் வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். Read More

எழும்பூர் காவலர் மருத்துவமனையில்புதியதாக அமைக்கப்பட்டுள்ள OxyenGenerator -Plant ஐ காவல் துறை தலைமைஇயக்குநர் திறந்து வைத்து வைத்தார்

சென்னை எழும்பூரில் இயங்கி வரும் காவலர்மருத்துவமனையில் காவல் அதிகாரிகள் ஆளினர்கள்மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவசிகிச்சை வழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில்முன்களப் பணியாளர்களாக பணி செய்துவரும்காவலர்களின் நலனுக்காக   சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., முயற்சியின் பேரில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட காவலர்கள் அவர்தம் குடும்பத்தினர்மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக காவலர்மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாகமாற்றப்பட்டு 75 படுக்கை வசதிகளுடன்  ஆக்சிஜன்செறிவூட்டிகளும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில்உள்ளது. மேலும் காவலர் குடும்பத்தைச் சேர்ந்தகொரோனா நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைவசதிகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது மெட்ராஸ் ரோட்டரி கிளப் நிர்வாகத்தினர் உதவியுடன் எழும்பூர் காவலர் மருத்துவமனையில்Oxygen-Plant புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழககாவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு, இ.கா. இன்று(11.08.2021) புதிதாக அமைக்கப்பட்ட Oxygen Generator Plantஐ திறந்து வைத்து பார்வையிட்டார். இதன் மூலம்காவலர் மருத்துவமனையில் உள்ள 75 படுக்கைகளில்சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றிஆக்சிஜன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் டாக்டர்.லோகநாதன், இ.கா.ப,, எழும்பூர் காவல் மருத்துவமனை தலைமைமருத்துவர் திரு.B.சுந்தர்ராஜ், மெட்ராஸ் ரோட்டரி கிளப்President திரு.M.சீனிவாசராவ்,  மெட்ராஸ் ரோட்டரிகிளப் உறுப்பினர் டாக்டர்.வசுதா மற்றும் காவல்அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

எழும்பூர் காவலர் மருத்துவமனையில்புதியதாக அமைக்கப்பட்டுள்ள OxyenGenerator -Plant ஐ காவல் துறை தலைமைஇயக்குநர் திறந்து வைத்து வைத்தார் Read More

காவலர்களுக்கான மருத்துவ பரிசோதணை முகாமை ஆணையர் துவக்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும்பொருட்டு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகாலத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றும் சென்னைபெருநகர காவல் ஆளிநர்களின் நலனுக்காக சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில், கொரோனாவிழிப்புணர்வு முகாம்கள், மருத்துவ முகாம்கள்நடத்தப்பட்டும், கொரோனா தடுப்பு உபகரணங்கள்வழங்கப்பட்டும் பல்வேறு நலத்திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., காவலர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலனுக்காக சென்னை பெருநகரில் உள்ள காவலர் குடியிருப்புகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், இத்திட்டத்தின் துவக்கமாக, 04.08.2021 அன்று மதியம், கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் , இ.கா.ப., துவக்கி வைத்தார். இம்முகாமில் கண், காது, தொண்டை, இரத்த அழுத்தம், நீரிழிவு, ECG மற்றும் ECHO உள்ளிட்ட மருத்துவபரிசோதனைகள் பெற்று கொள்ளவும், பரிசோதனை மற்றும்முடிவுகள் தொடர்பான விளக்கங்கள் அளிக்க சிறப்புமருத்துவர்கள் அமர்த்தப்பட்டும், சிறிய வகைநோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கவும்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், காவல் ஆளிநர்கள்மற்றும் அவரது குடும்பத்தினர் இம்முகாமில் கலந்து கொண்டுபரிசோதனை செய்து பயன்பெற காவல் ஆணையாளர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, கீழ்பாக்கம் காவல் குடியிருப்பில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடைபெறுகின்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை முகாமினைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப. அவர்கள் பார்வையிட்டு, காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இம்முகாமில், சென்னை பெருநகர காவல் கூடுதல்ஆணையாளர்கள் திரு.டி.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), திரு.பிரதீப்குமார், இ.கா.ப., (போக்குவரத்து), வடக்குமண்டல இணை ஆணையாளர் திரு.ஏ.டி.துரைகுமார், இ.கா.ப., துணை ஆணையாளர்கள், அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த பொது மேலாளர் சாய்நாராயணன், மேலாளர் தனுஷ்கோடி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காவலர்களுக்கான மருத்துவ பரிசோதணை முகாமை ஆணையர் துவக்கி வைத்தார் Read More