வக்ஃப் வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு; எஸ்கொயர் சாதிக் தலைமயில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 8: தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய‌ யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானை நேற்று முன்தினம் அவரது இல்ல அலுவலகத்தில், திமுக சிறுபான்மை …

வக்ஃப் வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு; எஸ்கொயர் சாதிக் தலைமயில் வாழ்த்து! Read More

மின்சார கட்டணக்கொள்ளை முடிவுக்கு வருமா? முதலமைச்சர் மனமிறங்குவாரா? – தங்கர் பச்சான்

அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்! ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன! மாதம் மாதம்  கணக்கெடுத்திருந்தால் 16 [பதினாறு] ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் …

மின்சார கட்டணக்கொள்ளை முடிவுக்கு வருமா? முதலமைச்சர் மனமிறங்குவாரா? – தங்கர் பச்சான் Read More

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி

டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்… பட்டாசு வெடிப்பு… அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் …

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி Read More

ஏழைகளின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நடிகர் சிரிஷ்

கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்கும் முதல் நடிகர்! – சிரிஷுக்கு கிடைத்த பெருமை ’மெட்ரோ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிரிஷ், ’ராஜா ரங்குஸ்கி’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ‘பிஸ்தா’ உள்ளிட்ட பல படங்களில் …

ஏழைகளின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நடிகர் சிரிஷ் Read More

சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ’

ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஷீரோ’, இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் …

சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ’ Read More

இனி பெப்சி தொழிலாளர் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ் திரையுலகம் சுமூகமாகவும்> பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்குவதற்க்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதை திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புகொண்டார்கள். ஆனால் அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் …

இனி பெப்சி தொழிலாளர் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு Read More

சிலம்பரசன் நடிக்கும்“வெந்து தணிந்தது காடு”

தமிழ் சினிமாவில்,  திரையில்,  மேஜிக்கை நிகழ்த்தும் சிலம்பரசன்  TR, AR ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி, ஏற்கனவே “விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா” எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றிகளை தந்துள்ளது. இந்த கூட்டணி பற்றி, சிறு செய்தி …

சிலம்பரசன் நடிக்கும்“வெந்து தணிந்தது காடு” Read More

மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சரத்குமார்

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு பள்ளிகள்செயல்படாமல், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைவரும்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்காலகனவுடன் உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின்முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், மத்திய அரசு கொரோனா 3 – வது அலை குறித்தமுன்னெச்சரிக்கை இன்றி, மாணவர்களின் பின்புலத்தில் நிலவும்ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் பற்றிய கவலையின்றி, செப்டம்பர் 12 – ந்தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பதுமருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்களைஅதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.  சமத்துவமற்ற கல்வி, சரிசமமற்ற பாடத்திட்டம், சீரற்ற கல்விகட்டமைப்பு என்றிருக்கும்போது, மாநில பாடத்திட்டங்களில்பயிலும் மாணவர்களுக்கு மத்திய பாடத்திட்டத்தின் கீழ் ஒரேவகையான தேர்வு நடத்தும் இத்தகைய போட்டி நிலை உலகில்எந்த நாடுகளிலும் கிடையாது. பல்வேறு மொழிகள், மரபுகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் கொண்ட பல மாநிலங்களைஒருங்கிணைத்து கூட்டாட்சியாக  இந்திய ஆட்சிநடைபெறுகிறது.  ஆனால், மாநில அதிகாரத்திற்குட்பட்டகல்விதுறையில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முனைவதுமுற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கிடையே நிலவும் சமூக, பொருளாதார வேறுபாடுகளை களையாமல், சமத்துவத்தைஉருவாக்காமல், எளிய மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும்தடுப்பாக நீட் அமைந்துள்ளது.  தேர்வில் அதிக மதிப்பெண் பெற, வசதியுள்ள மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில்லட்சக்கணக்கில் செலவு செய்து பயில்வார்கள். வசதியற்றமாணவர்களுக்கு தனியார் பயிற்சி சாத்தியமற்றது.

மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சரத்குமார் Read More

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்- தமிழ் தேசிய பேரியக்கம்

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ளபுதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய புதியமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த 03.08.2021 அன்று உச்ச நீதிமன்றம் அரியான மாநிலஅரசு – எதிர் – இராசுகுமார் என்ற வழக்கில் மிக முக்கியமானதீர்ப்பை வழங்கிருக்கிறது. “அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக்குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரைகட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்புகுறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போதுஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்றுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏமந்த் குப்தா மற்றும்ஏ.எஸ்.கோபண்ணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு உறுதிப்படகூறுகிறது. இதற்கு முன்னர் மாருராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்றவழக்கில் (1981, 1, SCC, 107) உச்ச நீதிமன்ற அரசமைப்புஆயம் “ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்துவடிவம். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மாநில அரசு தண்டனைக் குறைப்பு ஆணையை ஆளுநரின்ஒப்புதல் இல்லாமல் கூட நேரடியாக அறிவித்துவிடலாம்ஆயினும் பணி விதிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட இங்கிதம்காரணமாக அமைச்சரவையின் முடிவு ஆளுநரின் வழியாகசெயலுக்கு வரவேண்டிருக்கிறது” என்று அரசமைப்பு ஆயம்கூறியிருப்பதை தங்களது முடிவுக்கு அடிப்படையாகநீதிபதிகள் ஏமந்த் குப்தாவும், ஏ.எஸ். கோபண்ணதாவும்மேற்கோள் காட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு – எதிர் – சிறிகரன் என்றமுருகன் எனும் ஏழு தமிழர் வழக்கில் (2016, 7, SCC, 1) உச்சநீதிமன்றம் இதே போன்று கூறியிருப்பதையும் மேற்கோள்காட்டிய நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குகட்டுப்பட்டு முன் விடுதலை வழங்குவது அவரது நீங்கா கடமைஎனத் தெளிவுப்படுத்துகிறார்கள். இந்த புதிய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்துபுதிய பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாருராம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்விடுதலை மற்றும் மன்னிப்பு வழங்கும் செயலில் உறுப்பு 72ன்படியான குடியரசுத் தலைவரின் அதிகாரமும் உறுப்பு 161ன்படியான ஆளுநரின் அதிகாரமும் ஒத்தவலு உள்ளவை, ஒரேநேரத்தில் செயல்பட கூடியவை என்று தெளிவுபடகூறியிருக்கின்றன. எனவே இச்சிக்கல் குறித்து தமிழ்நாடு அரசு குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை ஒரு தடையாககருதாமல் புதிய பரிந்துரையை உருவாக்கி அதனைஆளுநருக்கு அனுப்பலாம். எந்த சட்டைத் தடையும் இல்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகஅமைச்சரவையை கூட்டி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழுதமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய பரிந்துரையைஆளுநருக்கு உடனடியாக அனுப்பி ஏழு தமிழர் விடுதலைக்குவலுவாக முயலவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம்சார்பில் கேட்டுகொள்கிறேன். 

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்- தமிழ் தேசிய பேரியக்கம் Read More

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 70 நிகழ்ச்சியாக  சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ஒரேமாதிரியான புதிதாக கிளைமன்றம்  திறந்து அரிசி 5கிலோ வீதம் , கீரை, காய்கறிகள் தக்காளி ,கோஸ், முருங்கை ,புடலை  ஆகியவை தூய்மைபணியாளர்கள் …

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் Read More