Priya Anand
No more Monday blues with Gorgeous @Priyaanand from her shooting spot PriyaAnand @teamaimpr
Priya Anand Read Moreonline news portal
No more Monday blues with Gorgeous @Priyaanand from her shooting spot PriyaAnand @teamaimpr
Priya Anand Read More
அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம்! கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மீண்டுவருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது.இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால்அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக்கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை, தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியமருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்தநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தைத் தொட்ட தொற்றுப் பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு – மருத்துவர்களின் அர்ப்பணிப்பு – மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு – துடிப்பான நிர்வாகம்ஆகிய நான்கின் காரணமாகவும்தான் இந்தளவுக்கு நாம்வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைய தகவல்களின்அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில்இருக்கின்றன. ஆக்சிஜன் படுக்கைகளாக இருந்தாலும் – தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக இருந்தாலும்ஏராளமாக உள்ளன. எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்குஉண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டுஎன்பதை நானும் அறிவேன்! நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவதுஒன்றே ஒன்றுதான் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம்என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும்அலட்சியமாக இருந்து விடக்கூடாது. தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் – அதனால் நாம் எந்தவிதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும்நினைக்கக் கூடாது. இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள்அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத்திறக்கவில்லை. பூங்காக்கள் திறக்கவில்லை. ஏனென்றால்இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள்.இப்படித் திறக்காமல் இருக்கிறோம் என்றால், ஏன் என்றகாரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கை உணர்வுடன்இருக்க வேண்டும். உணவகம், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப்போக்குவரத்து, அரசு மற்றும் தனியார்அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்தின் மீது உள்ள அக்கறையால்தான். முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம்பாதிக்கப்படுகிறது, அவசியமான பொருள்களைக் கூடவாங்குவதில் சிரமம் இருக்கிறது, அதேபோல் மாநிலத்தில்பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது – ஆகிய மூன்றுகாரணங்களால்தான் பல்வேறு தளர்வுகளை அறிவித்தோம். இந்த தளர்வுகளுக்கு உள்ளார்ந்த பொருள் இதுதான்.அதனைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரியஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள்அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசிபோட்டு முடிக்கவில்லை. ஒன்றிய அரசால் நமக்குவழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும்முழுமையாக நமக்கு வழங்கவில்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்துஇன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை.குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆலோசனைகள்நடந்துகொண்டு இருக்கின்றன. இப்படி எல்லாத்தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும்.அப்படிச் செலுத்துவதை மக்கள் இயக்கமாகவேமாற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காதநிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன்இருந்தாகவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நான்வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை. மக்கள் அனைவரும்தங்களுக்குத் தாங்களே சுயகட்டுப்பாட்டைவிதித்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு, அவசியத்தின்காரணமாக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படிவரும்போதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப்பின்பற்றுங்கள். * வீட்டை விட்டு வெளியில் வரும் எல்லோரும் முகக்கவசம்அணியுங்கள். * கூட்டமாகக் கூடுவதை தவிர்த்துவிடுங்கள். * வரிசையில் நின்று வாங்குங்கள். * வரிசையில் நிற்கும்போதும் போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள். * பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போதும் – அதிகமான கூட்டம் இருக்கும் இடத்திலும் இரண்டு முகக்கவசங்களைக் கூட பயன்படுத்தலாம். * கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினிகொண்டு சுத்தம் செய்யுங்கள். * கடைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசங்கள் பயன்படுத்துங்கள். * அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணியாற்றுங்கள். * கடைகளின் நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பானை வையுங்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்யுங்கள். * கடைகளுக்குள் ஒரே நேரத்தில் அதிகப்படியானஆட்களை அனுமதிக்க வேண்டாம். * நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்களாகவே தெரிந்த சிகிச்சை முறைகளைச் செய்து கொள்ள வேண்டாம். – இவை எல்லாமே மிகமிகச் சாதாரணக் கட்டுப்பாடுகள்தான்.இதனைப் பின்பற்றி நடந்து கொண்டாலே கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் தங்களுக்குத் தாங்களேபோட்டுக்கொள்ளக் கூடிய சுய கட்டுப்பாடுகளாக மாறவேண்டும். அந்த அடிப்படையில் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குத்தாங்களே காவல் அரணாக இருக்க வேண்டும். தளர்வுகளின்போது கட்டுப்பாட்டு விதிமுறைகளைமீறினால்தான் மூன்றாவது அலை வரக் கூடிய சூழல் எழும்என்கிறார்கள் மருத்துவர்கள். கட்டுப்பாடுகளை நாம்ஒழுங்காகக் கடைப்பிடித்தால் எந்த அலையும் உள்ளே வரமுடியாது. எனவே மக்கள் எல்லாரையும் நான் கேட்டுக் கொள்வது – தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்கவேண்டாம். விதிக்கப்பட்ட விதிமுறைகள் அமலில்தான் உள்ளன. விதிமுறைகளைப் பின்பற்றி நம்முடைய மதியால்கொரோனாவை வெல்வோம்.
தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்க கூடாதென்கிறார் முதல்வர் ஸ்டாலின் Read More
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வார்த்தை மக்களால் நான்…… மக்களுக்காகவே நான். இந்த வார்த்தைகளை நம்பித்தான், அவரை தொடர்ச்சி யாக இரண்டாம் முறையாக ஆட்சிப்பீடத்தில் அமர வைத்தனர் தமிழக மக்கள்.அவர் ஆறே மாதங்களில் விட்டுச் …
கோடநாடு எஸ்டேட்டை ஏலம் விடுமா தமிழக அரசு?:* ரூ.1,000 கோடி அரசு கஜானாவில் சேர வாய்ப்பு. Read More
கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. இதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் …
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: கோவையில் 30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு Read More
மெக்சிகோ வளைகுடாவில் நடுக்கடலில் கொந்தளித்த தீ, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ வளைகுடாவில், அரசு எண்ணெய் நிறுவனமான மெக்சிகன் பெமெக்ஸ், கடலுக்கடியில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. அதில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக எரிவாயு கசிந்ததை அடுத்து தீப்பிழம்புகள் கடலுக்கு மேல் கொப்பளிக்கத் …
நடுக்கடலில் கொந்தளித்த தீ : வைரலாகும் வீடியோ Read More
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்(TMJA) பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. கொரானா வைரஸ் காலங்களில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, அடிப்படைத் தேவைகளில் எந்த குறைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், திரைப் பிரபலங்களான அஜித் சிவகார்த்திகேயன், …
பத்திரிகையாளர்கள் நலனுக்காக பிரபல நட்சத்திரங்கள் ஆடி பாடிய புதிய இசை ஆல்பம் விரைவில் வெளியீடு Read More
உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின்அடிப்படையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்றவிமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலன்(27) என்பவர் தங்கம் கடத்தி வரக்கூடும் என்ற சந்தேகத்தின்பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறைஅதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 715 கிராம் எடையிலானதங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்கள் அவரது உடலில்மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுங்கச் சட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பில்மொத்தம் 633 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து தங்கத்தைப் பெறவிருப்பவரைகண்டறிவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வெளியேஅழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரைத் தேடி வந்த நபரும் பிடிபட்டார். ராமநாதபுரத்தைச்சேர்ந்த முஹம்மது உவைஸ் (23) என்ற அந்த நபர் இந்தகடத்தலில் தமது பங்கையும் ஒப்புக்கொண்டார். இருவரும்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 31 லட்சம் மதிப்பில் மொத்தம் 633 கிராம்தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது Read More
கீழடி அருகே கொந்தகையில் ஒரே அகழாய்வு குழியில் இருந்து 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகையில் 2ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடக்கும் நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் …
கீழடி அருகே கொந்தகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு! Read More
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கோமங்கலம் பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுனர் …
கணவன் மனைவி தகறாரில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை Read More
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 …
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு Read More