அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென போலீசாருடன் வாக்குவாதம்

ஈரோடு சூரம்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யக் கோரி அப்பகுதி மக்கள்; போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாநகர் பகுதிக்குள்பட்ட சூரம்பட்டி பாரதிபுரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வசிக்கும் …

அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென போலீசாருடன் வாக்குவாதம் Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களை ஆணையர் நலம் விசாரித்தார்

எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தும்,மருத்துவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை விவரம் கேட்டறிந்துமருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.​ சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் …

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களை ஆணையர் நலம் விசாரித்தார் Read More

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ

ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம்,  மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை …

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ Read More

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க நாம்இப்போதே தயாராக வேண்டுமென்கிறார் பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி

ஊரடங்கினால் இப்போது கொரோனா தொற்று குறைந்துவருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஊரடங்குதளர்த்தப்பட்டால் தொற்று அதிகரிக்கும் என்பதுதான். அதாவதுபொதுமக்கள் அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் அனைவரும் தடுப்பூசிபோட்டுக்கொள்வதும் மட்டுமே உண்மையில் தொற்றைக்குறைக்கும். மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்உள்ளன.  மூன்றாம் அலையின் தாக்கத்தையும் பாதிப்பையும்குறைக்க நாம் இப்போதே தயாராக வேண்டும் என்று தமிழ் நாடுஅரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குனர் டாக்டர்க.குழந்தைசாமி கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு களஅலுவலகமும் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து இன்று(1.6.2021) முற்பகல் நடத்திய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம்அலையை எதிர்கொள்ளுதல் மற்றும் தடுப்பூசியின் அவசியம்என்ற காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோதுடாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார்.  கர்ப்பிணிகளை கொரோனா தொற்று ஏற்படாமல்பாதுகாக்க வேண்டும். வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளைவீட்டார் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். உறவினர்கள், அண்டை அயலார் கூட வரக்கூடாது. பிரசவத்துக்குப் பிறகுகுழந்தையைப் பார்க்கக்  கூட யாரும் வரவேண்டாம். பாலூட்டும்தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கிராமத்தில் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் மூலம்தான் குடும்பம்குடும்பமாகத் தொற்று ஏற்படுகிறது. கோவிட்-19 இரண்டாம்அலையின் தாக்கம் இருக்கும் வரை தனித்து இருப்பதும்விசேஷங்களைத் தள்ளிப் போடுவதும் அவசியம் என்று டாக்டர்குழந்தைசாமி மேலும் தெரிவித்தார். சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும்மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா.அண்ணாதுரை தலைமை உரைஆற்றினார்.  இன்றைய நெருக்கடியான சூழலில்தான் அறிவியல்மனப்பான்மையின் தேவை உணரப்படுகின்றது. பகுத்தறிவுக்குஒவ்வாத கருத்துகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். அறிவியல்பூர்வமான உண்மையான தகவல்களை அடிக்கடிபகிர்ந்து கொள்ள வேண்டும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். கிராமத்தில் இருக்கும் செவிலியர் மற்றும்அங்கன்வாடிப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுமுன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று அண்ணாதுரைகேட்டுக் கொண்டார். விழுப்புரம் நகர நல அலுவலர் டாக்டர்ந.பாலசுப்பிரமணியம் விழுப்புரம் நகரத்தில் இரண்டு நகர நலமையங்கள் மற்றும் இரண்டு பள்ளிக் கூடங்களில் தினசரிகொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது என்று தெரிவித்தார்.  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா.மாலாமுதல் அலையின் போது பெரும்பாக்கத்தில் செயல்பட்டகோவிட் சித்தா மையத்தில் சுமார் 1000 தொற்றாளர்கள் முழுகுணமடைந்தனர். இப்போது இரண்டாம் அலையிலும் இதுவரை525 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்மாவட்ட அலுவலர் திருமிகு எஸ்.கே.லலிதா அங்கன்வாடிப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடுதம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போட வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகஇயக்குனர் திரு. ஜெ.காமராஜ் நிறைவுரை ஆற்றினார். மக்கள்தங்கள் பொறுப்புணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசிபோட்டுக்கொள்ள தயக்கம் காட்டவே கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் திரு. தி.சிவக்குமார் கடந்த 10 நாட்களில் மட்டும்விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 6100 பேருக்கு புதியதாககொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சுமார் 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்தார்.  களவிளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.  காணொலி கருத்தரங்கில் அங்கன்வாடிப் பணியாளர்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் கிராம மகளிர் என சுமார் 650 பேர்கலந்து கொண்டனர்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க நாம்இப்போதே தயாராக வேண்டுமென்கிறார் பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி Read More

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியை விரைவுபடுத்துக! வைகோ அறிக்கை

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை தொடர்பாக, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு உள்ளிட்ட பொதுநல வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு …

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியை விரைவுபடுத்துக! வைகோ அறிக்கை Read More

எஸ்.ஐ., யை தாக்கி விட்டு கைதிகள் தப்பியோட்டம் -ஒருவர் கைது

வியாசர்பாடி காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யை தாக்கி, ரவுடிகள் மூவர் தப்பியோடினர். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர்கள் அஜித்குமார், 24, அஜய் புத்தா, 26, மற்றும் ஜெகதீஸ்வரன், 20.இதில், அஜித்குமார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட, 25 வழக்குகள் உள்ளன. அஜய் புத்தா, ஜெகதீஸ்வரன் …

எஸ்.ஐ., யை தாக்கி விட்டு கைதிகள் தப்பியோட்டம் -ஒருவர் கைது Read More

சென்னையில் மேலும் ஒரு பாடசாலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையென புகார்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் விசாரிக்க முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வரும் 8ம் தேதி பள்ளி ஆசிரியர்கள் விசாரணைக்கு …

சென்னையில் மேலும் ஒரு பாடசாலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையென புகார் Read More

உதயநிதியிடம், முதல்வர் பொது நிவாரண நிதியளிக்கும் பிரபலங்கள்

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.லிங்குசாமி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்

உதயநிதியிடம், முதல்வர் பொது நிவாரண நிதியளிக்கும் பிரபலங்கள் Read More

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர் …

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி Read More

கொரோனாவால் உயிரிழக்கும்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூகபாதுகாப்பு நிவாரணம் அறிவித்தது இந்திய அரசு

கொரோனா மரண சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் நலன் பற்றி தொழிலாளர்களின்அச்சம் மற்றும் கவலையை போக்க, இஎஸ்ஐசி மற்றும்இபிஎப்ஓ திட்டங்கள் மூலமாக கூடுதல் பலன்களைமத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுஇல்லாமல், தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூகபாதுகாப்பு வழங்கப்பட மேண்டும் என கோரிக்கைஎழுந்ததை அடுத்து இந்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. தற்போது இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் காப்பீடுசெய்யப்பட்ட தொழிலாளியின் மரணம் அல்லது முடக்கநிலைக்குப் பிறகு, அவரது சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்கு ஓய்வூதியமாக அவரது வாழ்க்கைத்துணை, விதவைத் தாய் ஆகியோருக்கு வாழ்நாள்முழுவதும், குழந்தைகளுக்கு 25 வயது அடையும்வரையும், பெண் குழுந்தைக்கு திருமணம் ஆகும் வரையும்வழங்கப்படுகிறது. தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கீழ்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  இறந்ததொழிலாளியின் குடும்பத்தினருக்குகிடைக்கும் அதிகபட்ச பண பலன் ரூ.6 லட்சத்திலிருந்துரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.    இறப்புக்குமுன்பு, உறுப்பினராக இருந்த ஒருதொழிலாளி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டநிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள்பணியாற்றியிருந்தால், அவரது குடும்பத்தினருக்குகுறைந்தபட்ச உத்திரவாத பணப் பலன் ரூ.2.5 லட்சம்கிடைக்கும். இதற்கு முன்பு, இந்த விதிமுறை, ஒரேநிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள்பணியாற்றியிருக்க வேண்டும் என இருந்தது. அதுதற்போது மாற்றப்பட்டுள்ளது.  இது ஒரு நிறுவனத்தில்தொடர்ந்து ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்றநிபந்தனை காரணமாக பலன்களை இழக்கும் ஒப்பந்தம்/ சாதாரண தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும்.     குறைந்தபட்சம்ரூ.2.5 லட்சம் இழப்பீடு விதிமுறை 2020 பிப்ரவரி 15ம் தேதி முதல் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.    2021-22 முதல்2023-2024ம்ஆண்டு வரை வரும் 3 ஆண்டுகளில், இடிஎல்ஐ- நிதியிலிருந்து தகுதியானகுடும்ப உறுப்பினர்கள் பெறும்  காப்பீட்டு தொகைரூ.2185 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.    இந்ததிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 50,000 குடும்பங்கள்இழப்பீடு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில்10,000 பேர் கொரோனா காரணமாக இறக்கலாம் எனவும்மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் நல நடவடிக்கைள், கொரோனாகாரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின்குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தொற்றுஏற்பட்டுள்ள சவாலான நேரத்தில், அவர்களை நிதிநெருக்கடியில் இருந்து காக்கும்.   

கொரோனாவால் உயிரிழக்கும்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூகபாதுகாப்பு நிவாரணம் அறிவித்தது இந்திய அரசு Read More