தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்பவிளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும்நோக்கத்திலும், ஒன்றிய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப்பட்டியலில் சேர்த்திட மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றியஅரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுஅமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து“புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழான“விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும்உள்ளடக்கி ஊக்குவித்தல்” (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினைசேர்த்துள்ளது.  தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றியஅரசால்   அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்குபெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக்கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள்மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பலகூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலைஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்றுஇருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும்,கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாதுஇடம் பெற்று வருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்துசிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியவிளையாட்டு ஆணையத்தையும் (Sports Authority of India) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது Read More

நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இனிதே துவங்கியது

M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கும், இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது. இயக்குநர் திருமலை பாலுச்சாமி படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் முதன்மை பாத்திரங்களில்,  மண் சார்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். …

நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இனிதே துவங்கியது Read More

“பிளான் பண்ணி பண்ணனும்” திரையரங்கில் 24ஆம் தேதி வெளியாகிறது.

Positive Print Studios சார்பில்  L சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில்  இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி  திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”.  2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் …

“பிளான் பண்ணி பண்ணனும்” திரையரங்கில் 24ஆம் தேதி வெளியாகிறது. Read More

ரூ. 22.31 லட்சம் மதிப்பில் 390 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய்த்தில் பறிமுதல் பயணி கைது

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் 17.09.2021 அன்று இரவு 9 மணிக்கு ஏர் அரேபியா  ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது முழுக்கால்சட்டை பையில் மறைத்து …

ரூ. 22.31 லட்சம் மதிப்பில் 390 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய்த்தில் பறிமுதல் பயணி கைது Read More

யோகிபாபுவுடன் நகைச்சுவை பட்டாளமே நடிக்கும் “தேன் நிலவில் மனைவியை காணோம்”

மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரூரான் தயாரித்து வந்த ” காவி ஆவி நடுவுல தேவி” முடிவடைந்துவிட்டது. இந்த நிறுவனம் மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது அதற்கு ” தேன் நிலவில் மனைவியை காணோம்” என்ற காமெடி தலைப்பை …

யோகிபாபுவுடன் நகைச்சுவை பட்டாளமே நடிக்கும் “தேன் நிலவில் மனைவியை காணோம்” Read More

நிறைய வெற்றிப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களை தந்த இசையமைப்பாளர் ஷபீர்.

ஷபீர்,  இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக “சாகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, நீயா 2, கடாரம் கொண்டான் (பின்னணி பாடகர்)” படங்கள் மூலம் பெரும் புகழ் பெற்றவர்.  அவரது பாடல்களில் ஒன்றான “யாயும்” பாடல்  Youtube …

நிறைய வெற்றிப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களை தந்த இசையமைப்பாளர் ஷபீர். Read More

சூர்யாவின் “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” படத்தின் ‘சீரா சீரா’ எனும் முதல் பாடல் வெளியீடு

கிருஷ்ஷின் இசையில், மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் கிருஷ் பாடியுள்ள RARA திரைப்படத்தின் முதல் பாடலான சீரா சீரா பாடலை மனதைத் தொடும் வரிகளுடன் யுகபாரதி எழுதியுள்ளார். சமூக நடப்புகளை நையாண்டி செய்யும் விதமான எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் Amazon Prime Video-இல் செப்டம்பர்-24 …

சூர்யாவின் “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” படத்தின் ‘சீரா சீரா’ எனும் முதல் பாடல் வெளியீடு Read More

சுங்கச்சாவடிகள் குறித்து நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனம் – வேல்முருகன்

தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்ததான் வேண்டும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.  வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணங்களை வசூலித்து …

சுங்கச்சாவடிகள் குறித்து நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனம் – வேல்முருகன் Read More

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும், இராவணகோட்டம் படப்பிடிப்பு நிறைவடைந்தது

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்,  Kannan Ravi Group சார்பில்  தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி தயாரிக்கும் “இராவணகோட்டம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. படம்  குறித்து தயாரிப்பாளர்   திரு. கண்ணன் ரவி கூறியதாவது. “இராவணகோட்டம்” படத்தின் …

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும், இராவணகோட்டம் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

அக்டோபர் 01 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது “ருத்ர தாண்டவம்”

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்”  மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி …

அக்டோபர் 01 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது “ருத்ர தாண்டவம்” Read More