சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தட்டுவண்டி’. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் ‘தட்டுவண்டி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இளையராஜாவின் இசையும், திறமையான கலைஞர்களின் பங்களிப்பும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’
