அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிறது, புத்தம் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம்

ஆக்சன் கிங்  அர்ஜூன் ஆக்‌ஷன், க்ரைம் படங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் நடித்த க்ரைம் ஆக்‌ஷன் படங்களின்  பிரமாண்ட வெற்றிகளை தொடர்ந்து, ஆக்‌ஷன் கிங் பட்டத்தை பெற்றவர். அவரது தொடர் திரில்லர் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, புதிதாக மீண்டும் ஒரு வித்தியாசமான …

அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிறது, புத்தம் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் Read More

ஒன்றரை வருடத்திற்குப் பிறகு மதுரையிலிருந்து இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது

கொரோனா முதல் அலை காரணமாக கடந்த 2020- ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மதுரைவிமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 1½ வருடத்திற்கு பின் தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவில் இருந்து 38 பயணிகள்நேற்று மதுரை விமான நிலையம் வந்தனர். மதுரை விமான நிலையத்தில் உள்ள சுகாதார துறைஅதிகாரிகள் மூலம், விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் மதுரையில் இருந்து இலங்கைக்கு 76 பயணிகள் அதே விமானத்தில் புறப்பட்டு கொழும்புசென்றனர். கொரோனா பரிசோதனை சான்று மற்றும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விமானத்தில்செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாரத்தில் திங்கட்கிழமை மட்டுமே இந்த விமான சேவை உள்ளது. அதன்படி, இலங்கையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.15 மணிக்கு மதுரைவந்தடையும். மீண்டும் 10.15 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு இலங்கை சென்றடையும் என அதிகாரிகள்தெரிவித்தனர்

ஒன்றரை வருடத்திற்குப் பிறகு மதுரையிலிருந்து இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது Read More

ரசிகர் வீட்டு கல்யாணத்தை முன்னின்று நடத்திய விஜய் ஆண்டனி

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர் பீர் முகமது. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு என்று  எந்த விழாவாக இருந்தாலும் முதல் ரசிகராக பட போஸ்டர் ஒட்டுவது, திரையரங்கத்தின் முகப்பை அலங்கரிப்பது என்று வரிந்துகட்டிக்கொண்டு களப் …

ரசிகர் வீட்டு கல்யாணத்தை முன்னின்று நடத்திய விஜய் ஆண்டனி Read More

டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது

எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது. இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் …

டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது Read More

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம்நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம்முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்தபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக்காணிக்கை‘ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள்அறிவித்தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்குவந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப்பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும்விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றைவிதி எண் 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில்வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரியநல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) ”ஈ.வெ. இராமசாமி என்கிற நான் திராவிடசமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்றசமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ளசமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன்.  இதைச் செய்யஎனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும்வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டுதொண்டாற்றி வருகிறேன்” என்றுஅறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச்சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காகப் போராடியவர்தான் தந்தை பெரியார்அவர்கள்.  (மேசையைத் தட்டும் ஒலி) ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையேஅடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம்தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் மானமும்அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலகஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்தியபோராட்டங்கள் யாராலும் ‘காப்பி‘ அடிக்க முடியாதபோராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும்எழுதத் தயங்கும் எழுத்துக்கள்; அவர் பேசியபேச்சுக்கள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர்நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்;தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனதுஎதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்தநடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர்நடத்திய மாநாடுகள், அவர் நடத்தியபோராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்தமாமன்றத்தையே பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்துப்பேச வேண்டும். “மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்” – இவைஇரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகியஇரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன.  அந்த இரண்டுக்கும்எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவைஅனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக்கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத்தூண்டினார்.  அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம்சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர்உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம்சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கிஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில்மேன்மையை அடைவதற்கான சமூகநீதிக் கதவைத்திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இன்று இந்தியாமுழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள்விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்டஅடித்தளமே காரணம். நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாதஅவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது.சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரதுசிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்தமாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தனதுசிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும்அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது.  ‘என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தைபெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்தகாலம்தான்‘ என்று நம்மையெல்லாம் உருவாக்கியபேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். ”பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்”  என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.  (மேசையைத் தட்டும் ஒலி) பேரறிஞர் பெருந்தகையும், தலைவர் கலைஞர் அவர்களும் உருவான குருகுலம்பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப்பயிற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தைஉருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துக்களைத்தமிழ்நாட்டில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதேகொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை …

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம்நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில், மரியாதை செய்து வழியனுப்பி வைத்த இயக்குநர் ஹரி

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் “AV33” . இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்தது. இந்தியாவையே திரும்பி பார்க்க …

படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில், மரியாதை செய்து வழியனுப்பி வைத்த இயக்குநர் ஹரி Read More

நான் சிவப்பு மனிதன்’ பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’

சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் .ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71வது  படமாக உருவாகி இருக்கிறது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம்.இப்படத்தை       ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில்   எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார். சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், …

நான் சிவப்பு மனிதன்’ பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’ Read More

தாரளப்பிரபு நாயகி தான்யா ஹோப்பின் தாராள குணம்

தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் தான்யா ஹோப். அசாதாரணமான  இந்த காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். குறிப்பாக எளிய மக்களின் பசியை போக்கும்விதமாக உணவளித்து வருகிறார். இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு …

தாரளப்பிரபு நாயகி தான்யா ஹோப்பின் தாராள குணம் Read More

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபாவைரஸ் பரவல் கண்டுபிடிப்பு

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ்பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குமத்தியக் குழு விரைந்துள்ளது. கோழிக்கோட்டில் கடந்த 3ம் தேதி, 12 வயது சிறுவன்ஒருவன்  மூளை அழற்சி மற்றும் மாரடைப்பு அறிகுறியுடன்மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு நிபாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  இந்த வைரஸ், பழந்தின்னிவவ்வால்களின் எச்சில் மூலம் பரவுகிறது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன்இன்று காலை உயிரிழந்தான். இதையடுத்து கேரளாவுக்கு நோய்கட்டுப்பாட்டு  தேசியகுழுவை (என்சிடிசி) மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தகுழு கேரளாவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியைவழங்கும். இங்கு நோய் கட்டுப்பாடு, பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள  மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டும், கேரள மாநிலம்கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபாவைரஸ் பரவல் கண்டுபிடிப்பு Read More

ஸ்ரீகாந்த் படத்தின் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி …

ஸ்ரீகாந்த் படத்தின் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் Read More