விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ படம் ஜன.25ல் வெளியீடு

செந்தூர் பிலீம் இண்டர்நேஷ்னல் டிடி ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரிப்பில், தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்ஹிட்லர்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் போசிய விஜய் ஆண்டனி, ‘இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய விசிறி நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒருஅழகான படத்தை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக நகைச்சுவையில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. இனிமையான எளிமையான மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். விவேக், மெர்வின்  இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் சண்டை இயக்குநர் முரளி , அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் ஒளிப்பதிவாளர்.  இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் முக்கியமானபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.*******

இயக்குநர் தனா பேசியதாவதுஇந்த படத்தில் நன்றி என ஆரம்பித்தால் 500 பேருக்கும் மேல் நன்றி சொல்ல வேண்டும். அத்தனைபேரின் பங்கும் இருக்கிறது. என்னை நம்பி தயாரித்த ராஜா சார், என் கதையில் நடிக்க வந்த விஜய்ஆண்டனி சாருக்கு நன்றி.  இந்த படத்தில் மிகச் சிறந்த நடிகர் பட்டாளம் எனக்குக் கிடைத்தார்கள். அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. கௌதம் மேனன் சார், விஜய் ஆண்டனி சார்என எல்லோருமே அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப்படம் முன்பே வந்திருக்க வேண்டியது. விஜய் ஆண்டனி சாருக்கு நடந்த எதிர்பாராத ஆக்ஸிடெண்ட் படத்தைத் தாமதமாகியது. அந்தஆக்ஸிடெண்ட் நடந்து அவர் எங்களுக்காக விரைவாக எழுந்து வந்தார். அவரது அர்ப்பணிப்புவியப்பானது.  அவருக்கு என்றென்றும் நன்றி. இந்த இடத்தில் என் ஒளிப்பதிவாளர் நவீன்குமாருக்கு நன்றிசொல்லிக் கொள்கிறேன். அவரது உழைப்பு அபாரமானது. படத்தின் மியூசிக் விவேக்,மெர்வின். நாங்கள்மிக நட்பாக எல்லாவற்றையும் பேசிக்கொள்வோம். படத்திற்காக என்ன செய்யலாம் என என்னுடன் பேசிப்பேசி, எல்லாவற்றையும் செய்வார்கள். இசை மிக அற்புதமாக வந்துள்ளது. அவர்களுக்கு நன்றி. சங்கத்தமிழன், மணிரத்னம் சார் படத்திலிருந்தே தெரியும். அவருடன் மிக நட்பாகப் பழகுவேன். எனக்காக இறங்கி வேலை செய்வார் அவருக்கு நன்றி. ரியா சுமனுக்கு பதிலாக முதலில் வேறு ஒருஹீரோயின் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் ஷூட்டிங்கிற்கு இரண்டு நாட்கள் முன்னால்அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்காக வந்தவர் தான் ரியா சுமன், மிகச்சிறந்தநடிகை. ரொம்பவும் புரபஷலானவர். நன்றாக நடித்துள்ளார். “ஹிட்லர்எனது முந்தைய படங்களிலிருந்துமாறுபட்ட படம்.  ஒரு ஆக்சன் திரில்லர் படம். படத்தைப் பார்த்த போது எங்களுக்கு நிறைவாக இருந்ததுஅதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.