‘தேசிங்கு ராஜா 2’வுக்காக மும்பை நடன அழகியுடன் விமல்

எழில், ‘தேசிங்கு ராஜாபடத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கிறார். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார் பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜனாவும் இரண்டாவது கதாநாயகியாக ஹர்ஷிதாவும் நடிக்கின்றனர். மேலும் ரவிமரியா, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், விஜய் டிவி புகழ், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம்புலி, சாம்ஸ், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் ஒன்றுக்காகா  கிழக்கௌ கடற்கரயில் ரூ.50 லட்சம் செலவில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் விமல் மற்றும்  பிரபல பாலிவுட் நடன அழகி சினேகா குப்தா இருவரும் இணைந்து நடனமாடுகிறார்கள்.********