நடிகர்கள் விமல், சூரி நடிக்கும் ‘படவா’ படத்தின் இசை வெளியீடு

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும்படவாதிரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு  நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்புகழ் ராம்வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம்ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார்.*******

கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராகவினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர். சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும்வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான்பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர். படவாரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில்நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு.

இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் பீட்டர் பேசியதாவதுஅனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்தப் படத்தில் சூரி சார் பெரிய கேரக்டர் செய்துள்ளார். அவர்சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் வாழ்த்த வரவேற்கிறேன்