ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. விஜய் பாண்டி மற்றும் ஷன்ஜன் ஜி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். எஸ்.ஒய்.கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஜெயராம், சிம்ரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க வாழை படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பொன்வேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவிகா சதீஷ், பகவதி பெருமாள், உள்ளிட்டோர் முக்கிய இணைந்து நடிக்கின்றனர். பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.*********

படத்தின் ஒளிப்பதிவை தீபக் மேற்கொள்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்பை கவனிக்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாடல்களுக்கு கார்த்திக் நேதா வரிகள் எழுதுகிறார். அனுஷா விஸ்வநாதன் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.

M. முகமது சுபியர் ஆடை வடிவமைப்பையும், ஷயத் மாலிக் S ஒப்பனைப் பணிகளையும் கவனிக்கின்றனர். SN அஸ்ரஃப் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், D. உதயகுமார் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர். சரவணகுமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சாய்ராம் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் உள்ளனர். விஜய் வெங்கடராமன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.

கன்னதாசன் DKD விளம்பர வடிவமைப்பை மேற்கொள்கிறார். ஜெய்குமார் வைரவன் ஸ்டில்ஸ் பணிகளை கவனிக்கிறார். சதீஷ் (AIM) மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜ். கதிர்ஹாசன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார். படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், இப்படத்தின் பூஜை விழா உற்சாகமாக நடைபெற்றது. இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.