டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு திரைக்கதையில் உருவாகும் “ரேவன்”

எம்.ஜி.ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏபிவி மாறன் உடன் இணைந்து இயக்குநர்  கணேஷ் கே.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும்  ரேவன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு,பூஜையுடன் துவங்கியது. தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணுலலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில்,  போர்ட் என்ட்டெயின்மென்ட் முருகானந்தம்,  அருண் விஷ்வா, விநியோகஸ்தர் கோவை அரவிந்த் மற்றும்போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, யாத்திசை இயக்குநர் தரணி ராஜேந்திரன், குட்நைட் இயக்குநர்விநாயக் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.******

மாறுபட்ட களத்தில் புதுமுகங்களின் தற்கால நவீன தலைமுறையின் கதை சொல்லும் திரைப்படமாக  ரேவன்படம் உருவாகிறது. டாடா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் கணேஷ் K பாபு கதை திரைக்கதை எழுத, அவரது இணை இயக்குநராக பணியாற்றிய, கல்யாண் K ஜெகன் இயக்குநராகஅறிமுகாகிறார்.

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில்,  நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாகநடிக்கிறார். இயக்குநர் கே பாக்யராஜ், VTV கணேஷ், வீரா, இந்துமதி, பா.அருணாச்சலேஸ்வரன் ஆகியோர்முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள்பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஒரே கட்டமாக  படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் முழுப்படப்பிடிப்பும் நடக்கவுள்ளது.  ரேவன்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படும்.

*தொழிழ் நுட்ப குழு விபரம்* தயாரிப்பு நிறுவனம் – MG STUDIOS தயாரிப்பு – APV. மாறன், கணேஷ் K பாபு. இயக்கம்கல்யாண் K ஜெகன் கதை, திரைக்கதைகணேஷ் K பாபு. ஒளிப்பதிவுரவி சக்தி இசை அமைப்பாளர்மனு ரமீசன் எடிட்டர்கதிரேஷ் அழகேசன் கலை இயக்கம்சண்முக ராஜா நிர்வாக தயாரிப்புமீனா அருணேஷ் ஒலி வடிவமைப்புஅருணாசலம் சிவலிங்கம் ஸ்டன்ட்நைஃப் நரேன் டிசைன்ஸ்விக்ராந்த் ஆடை வடிவமைப்பாளர்காயத்திரி பாலசுப்பிரமனியன் ஸ்டில்ஸ்குமரேசன் சிஜி – NxGen Media மக்கள் தொடர்புதிருமுருகன்பரணி அழகிரி