‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், தற்போது அவரின்தயாரிப்பில்சிரோதிரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணிலிஷா சின்னு, நோபல்ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியது. விவேக் ராஜாராம் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.****

இவர் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்குவது மற்றும் டிசைனராகவும்பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறும்போது, “எங்கள்சிரோபடத்தின் படப்பிடிப்பு எளியபூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழுபடப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தரதொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம். எங்களின் முதல் தயாரிப்பானவெப்பன்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மைகதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது. அதுபோலவே, ‘சிரோதிரைப்படமும் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தைபார்வையாளர்களுக்குக் கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்தப்படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம்என்றார்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:* ஒளிப்பதிவு: கிஷன் சி.வி, எடிட்டிங்: கோபி கிருஷ்ணா, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சிவகுமார், நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான், விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக், மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திராரேகா டிஒன்