குப்பை மேட்டில் சிதறிய குன்னிமுத்துக்கள் ‘புதுவேதம்’

விட்டல் மூவிஸ் தயாரிப்பில் ராஜா விக்ரம் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ், இமான் அண்ணாச்சி, சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிசர் மனோகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திதுக்கும் படம்புதுவேதம்‘. ‘குப்பைமேட்டுகாவியம்ஆக உருவாக்கியுள்ளார் இயக்குநர். சமூக வழிமுறைகளை எடுத்துச் சொல்ல அறிமுக நடிகர்களே போதும் என்பதைபுதுவேதம்பதிவு செய்திருக்கிறது. பெற்றோர்களால் குப்பை மேட்டில் வீசப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை கண்ணீர் மல்க படமாக்கியுள்ளார்கள். குப்பை மேட்டிலிருக்கும் ஒரு சிறுவன், “என்னை பெற்றவர்கள் யார் என்று தெரியாது. எனக்கு இரண்டு கால்களும் இல்லாததால் குப்பை மேட்டில் போட்டுவிட்டார்கள்என்று கூறும்போது அச்சிறுவனின் கண்களும் உதடுகளும் இயற்கையாகவே அழுகின்றன. இக்காட்சியை படமாக்கும்போது அச்சிறுவன் நடிக்கவில்லை உண்மையாகவே அழுதுவிட்டான். இதை ஒரு திரைப்படம் என்று சொல்வதை தவிர்த்து, காவியம் என்றே சொல்ல வேண்டும்.****