‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் வரும் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புஜிதா பொன்னாட. அறிமுகமாகிறார்*****$*

தனது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் என்கிறார் புஜிதா. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த புஜிதா, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வளர்ந்தார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட குடும்பச் சூழலில் வளர்ந்த புஜிதா, சென்னையில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பை முடித்தார். பின்னர் ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.

கல்வி மற்றும் வேலைக்கு இடையில் ஓவியம், நடனம் என கலை மீதும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. இந்நிலையில், குறும்படங்களில் நடிக்குமாறு ஒரு இயக்குநர் அவரை அணுகியபோது, எதிர்பாராத விதமாக நடிப்புத் துறைக்குள் நுழைந்தார். அங்கிருந்து திரைத்துறைக்குள்ளும் அவர் அடியெடு்த்து வைத்தார்.

அவர் நடித்த ‘பரிச்சயம்’ என்ற குறும்படம் பிரபல இயக்குநர் சுகுமாரின் கவனத்தை ஈர்த்தது. விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பின் மூலம் அவரைச் சந்தித்த புஜிதா, பின்னர் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவான ‘தர்ஷகுடு’ திரைப்படத்தில் நடிக்கத் தேர்வானார். தொடர்ந்து ராம் சரண் நடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்திலும் ஆடிஷன் மூலம் தேர்வாகி நடித்தார். நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்த நிலையில், மென்பொருள் பொறியாளர் பணியிலிருந்து விலகி, முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்தார் புஜிதா. இதுவரை சுமார் 25 திரைப்படங்களில் நடித்துள்ளார்.