“ரஞ்சன் அட்வகேட்” படத்துக்கு பின்னணி குரல் கொடுத்த முத்துக்காளை

சோகத்தில் இருந்து சற்று மீண்டு, பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் ‘ரஞ்சன் அட்வகேட்’ என்ற படத்திற்கு, தான் நடித்த காட்சிகளுக்கு பின்னணி குரல் பேசினார் நடிகர் முத்துக்காளை. சமீபத்தில் நடிகர் முத்துக்காளை மனைவி இறந்ததற்கு விசாரித்து, ஆறுதல் கூறினார் நடிகர் தியாகராஜன். மேலும், பின்னணி பேசி முடித்ததும் நன்றாக நடித்துள்ளீர்கள். நல்ல பெயர் கிடைக்கும் என முத்துக்காளையை பாராட்டினார் நடிகரும், ‘ரஞ்சன் அட்வகேட்’ படத்தின் இயக்குநருமான தியாகராஜன்****