சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் “இருள் சூழும் இரவினிலே”. பொழுதுபோக்கு நகைச்சுவை கலந்த பேய் ப்டமாக உருவாகியுள்ள இப்படத்தை சிவராம் இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திகில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் சிவராம், ரேகா ரமேஷ், நைடிலே ஷைவா, நந்தா கோபால், கீதா, அன்னபூர்ணா, அரவிந்த் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.*********
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரங்கள்: இசை: விஷ்ணுவர்தன் சண்டைக் காட்சிகள்: வயலன்ட் வேலு (100-வது திரைப்படம்) ஒளிப்பதிவு: அருண் சுஷில், அனில் கிருஷ்ணா படத்தொகுப்பு: அரவிந்த் ஜே.பி. DI: நிகில் கரியப்பா உடை வடிவமைப்பு: குமார் தயாரிப்பு மேலாளர்: நாகேஷ் கலை இயக்கம்: சச்சின் ஒப்பனை: நந்தீஷ், சங்கர் ரத்தோட் டிசைன் & VFX: பரதிராஜா நடன அமைப்பு: ராஜ் தேவ் PRO -Sivakumar போஸ்ட் புரொடக்ஷன்: சிவானி ஸ்டுடியோஸ்

