காவ்யா ஃபிலிம் கம்பனி தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தமிழ் திரையுலகில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை அறிவித்துள்ளது. ஆர். சரத்குமாரின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 12” என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தனித்துவமான திரைக்கதை அமைப்பிலும், புத்தாக்கமான இயக்கத்திலும் பெயர் பெற்ற இவர், நடிகர் சரத்குமாரை இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் காட்டவுள்ளார்..*****
ஒளிப்பதிவு: கோகுல் பெனாய் இசை: ஜஸ்டின் பிரபாகரன் படத்தொகுப்பு: கலைவாணன் ஆர் கலை இயக்கம்: எஸ்.எஸ். மூர்த்தி கூடுதல் திரைக்கதை & வசனம்: தமிழ் பிரபா (Thamizh Prabha – ‘சார்பட்டா பரம்பரை’, ‘தங்கலான்’ புகழ்) ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன் மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர் லைன் புரொடியூசர்: கோபகுமார் ஜி.கே. நிறுவன தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஷிபு ஜி சுசீலன் படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் மாதங்களில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். நம்பிக்கை தரும் தயாரிப்பு நிறுவனம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் மற்றும் திறமைமிக்க இயக்குநர் கமல் பிரகாஷ் இணையும் இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 12’ திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

