சாய் துர்கா தேஜ், இயக்குநர் ரோஹித், நிரஞ்சன் ரெட்டி, மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோரின் கூட்டணியில், பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சாய் துர்கா தேஜ்வுடன் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னட நடிகர் தனஞ்செயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகபதி பாபு, நரேஷ் வி கிருஷ்ணா, சாய் குமார், ஸ்ரீகாந்த் மற்றும் அனன்யா நாகள்ள உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரோஹித் கே.பி. இயக்கத்தில் உருவாகும் ‘சம்பரலா ஏடி கட்டு’ திரைப்படம் ஜனவரி 12, 2027 திரையரங்குகளில் வெளியாகிறது.**********
படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடும் வகையில், படத்தின் உருவாக்கப் பணிகள், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் படக்குழுவினரின் உணர்வுப்பூர்வமான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
படக்குழு விவரம்: நடிகர்கள்: சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, தனஞ்செயா, ஜெகபதி பாபு, நரேஷ், சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ள, ரவி கிருஷ்ணா. எழுத்து மற்றும் இயக்கம்: ரோஹித் KP தயாரிப்பாளர்கள்: கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி தயாரிப்பு நிறுவனம்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் ஒளிப்பதிவு: வெற்றி பழனிசாமி இசை: B . அஜனீஷ் லோக்நாத் படத்தொகுப்பு: நவீன் V. கிருஷ்ணா தயாரிப்பு வடிவமைப்பை : காந்தி நதிக்குடிகர் ஆடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம் மக்கள் தொடர்பு: யுவராஜ் மார்க்கெட்டிங்: ஹேஷ்டேக் மீடியா வெளியீட்டுத் தேதி: ஜனவரி 12, 2027

