பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரங்கள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இவர்களுடன் தபு, துனியா விஜய், ஜரினா வஹாப், பிரம்ஹாஜீ , வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான திரைமொழிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பூரி ஜெகன்நாத், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுகக் காணொளிகள், படத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.********
இப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, படத்தின் விளம்பரப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

