சோனி விழாவில் இந்த விஜயதசமிக்கு அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்

இந்த விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது. அதிரடி, குடும்பப் பாசம், பழிவாங்குதல் கலந்த உணர்வுகள்  என பல அம்சங்களைக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘குட் பேட் அக்லி’ உருவாகியுள்ளது. தனது கடந்த கால வாழ்க்கையை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமைதியாக வாழ நினைக்கும் ஒரு முன்னாள் ரௌடியின் கதைதான் இப்படம். ஆனால் அவரது மகனுக்குப் பிரச்சனை ஏற்படும்போது அவர் மீண்டும் தான் விட்டுச் சென்ற பழைய உலகத்திற்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகின்றது. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராப், பிரபு, பிரசன்னா, சுனில், பிரியா பிரகாஷ் வாரியர், கார்த்திகேயா தேவ் மற்றும் ரகு ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.*******

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் அதிரடி சண்டைக் காட்சிகள், பழைய நினைவுகளைத் தூண்டும் விஷயங்கள்,ஸ்டைல் மற்றும் மாஸ் பொழுதுபோக்கு என ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரின் திரைப்படத்தை இந்த விஜயதசமிக்கு ஒளிபரப்புவதன் மூலம் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறப்பான சினிமா அனுபவத்தை சோனி விழா வழங்குகின்றது.