‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா

காவியா புரடெக்‌ஷன்ஸ் மற்றும் எஸ்.2 மூவீஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை  நடைபெற்றது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.2மூவீஸ்  இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி. அகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ரெம்பன் பால்ராஜ் கலை இயக்குநராகவும், ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக சேலம் சரவணன் செயல்படுகிறார்.*******

பட  விழாவில் இயக்குனர் கே.ஆர் செந்தில்நாதன் பேசியது:  அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். இன்று முதல் நாளாகவே எங்கள் படத்தின் பூஜை விழாவுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை தயாரிப்பாளர் திரு. மஞ்சுநாத் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரச்சிதா மேடம், யாஷிகா மேடம் மற்றும் இங்கு வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், நடிகையும் அரசியல்வாதியுமான YGM மதுவந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.