நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்,  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரு. ராகுல் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.  மற்றும் டிகம்பெனி நிறுவனத்தின் கே.வி. துரை இணைத் தயாரிப்பு செய்கிறார்.  இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். நடிகர் ருத்ராஓஹோ எந்தன் பேபிதிரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ருத்ரா. தர்புகா சிவாஓஹோ எந்தன் பேபிபடத்திற்கு இசையமைக்கிறார். அச்சம் என்பது மடமையடாமுதல் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். பிரணவ் R படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ராஜேஷ் கலை இயக்கம் செய்கிறார்.********

இப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் கோலாகலமாகத்துவங்கியது. படக்குழு அடுத்த இரண்டு வாரங்கள், தொடர்ச்சியாக முதல் ஷெட்யூலுக்கான படப்பிடிப்பை நடத்தவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, கோவா மற்றும் இந்தியாவின் பல இடங்களில்படமாக்கப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.