தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சௌந்திரியா ரஜினிகாந்த்  மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இணை தயாரிப்பாளருடன் நேரில் சந்தித்து ஆசி பெற்ற்ரர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.****