தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பு ஏற்ற எம். அப்துல் ரஹ்மானுக்கு; ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் வாழ்த்து!

செங்கல்பட்டு, ஜூலை. 27: ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் இல்லத்திற்கு வருகை தந்த, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானை, ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் வரவேற்று தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பு ஏற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் தம்பியும், திருச்சி தொழிலதிபருமான எம். சிராஜுதீனை, தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம் வரவேற்றார். தங்கம் குழுமத்தின் பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம் உடனிருந்தார்.