“4த் ஃப்ளோர்” பிப்.27ல் திரைக்கு வருகிறது

மனோ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ராஜா  தயாரிப்பில், எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான  படமாக உருவாகியுள்ள திரைப்படம்  “4த் ஃப்ளோர்”.   இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.*******

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது..,  எல்லாருக்கும் வணக்கம். எங்களின்  4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது.  நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம்.   இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை  கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம். அந்த விஷயத்தில் இந்த படம் நல்லபடியாக வந்திருக்கிறது. ஒத்துழைத்த ஆதி, இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி.  அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் L R சுந்தரபாண்டி பேசியதாவது..,  இது எனக்கு மூன்றாவது படம். தயாரிப்பாளர் ராஜா சார். அவரை அண்ணன் என்று சொல்லவா, நண்பர் என்று சொல்லவா எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – இந்த படத்தின் மூலம் ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது. இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்க முடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும். “இது என்ன ஜானர்?” என்று கேட்டால், ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம். கதையை முதலில் கேட்டவுடனே ஆரி  சார் இந்த படத்தில் இணைந்தார். இந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே வந்த முதல் நபர் அவர்தான். அதுமட்டுமல்ல, சின்னதாக ஆரம்பித்த இந்த படத்தை பெரிய அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்தான் கொடுத்தார். இது தயாரிப்பாளர்டெக்னீஷியன் உறவாக இல்லாமல், நண்பர்கள் சேர்ந்து செய்த ஒரு படமாக வந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், பாடல்கள், எமோஷன் எல்லாம் கலந்து வந்த ஒரு முயற்சி. அது உங்களுக்கெல்லாம் ஒரு திருப்தியான அனுபவத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது உங்கள் கைகளில்தான் உள்ளது. மீடியா நண்பர்கள் அனைவரும் இந்த படத்திற்கு உங்கள் முழு ஆதரவை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தொழில் நுட்ப குழு விபரம்  இயக்குநர்: L R சுந்தரபாண்டி  தயாரிப்பாளர்: A.ராஜா  நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P ஒளிப்பதிவு : J லக்ஷ்மன்  இசையமைப்பாளர்: தரண் குமார் பாடலாசிரியர் : கு கார்த்திக் எடிட்டர்: ராம் சுதர்ஷன் கலை: சுரேஷ் கல்லேரி  நடனம் : அபு சால்ஸ் ஸ்டண்ட்: டேஞ்சர் மணி  மக்கள் தொடர்பு : A ராஜா