யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் முன்னோட்டம்

தேவ் சினிமாஸ்  சார்பில் கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில், அறிமுக ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.இந்த முன்னோட்டத்தின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாக தோன்றுகிறார் யோகிபாபு. தன் வண்டியை மீட்க யோகிபாபு போராடுவதும் அதே வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதும் என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த முன்னோட்டம் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.படம் வெளியானால் பழைய வண்டிகள் வாங்கி விற்பதில் நடக்கும் பெரும் மோசடிகள் அனைத்துமே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும் என அர்ஜுனன் பேர் பத்து படக்குழு தெரிவித்தனர். மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், இது நடிகர் யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.********

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, யதார்த்தம் கலந்த உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார். மேலும் காளி வெங்கட், அருள் தாஸ், அயலி மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சௌந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படத்திற்கு D. இமான் இசையமைத்துள்ளார். தண்டகாரண்யம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை செய்துள்ளார். அமரன் படத்தின் கலை இயக்குநரான சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். தலைவன் தலைவி படத்தின் ஆடை வடிவமைப்பாளர் நட்ராஜ் இப்படத்திற்கு ஆடை வடிவமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விபரம் தயாரிப்பு: Dev Cinemas Pvt Ltd இயக்கம்: ரா. ராஜ்மோகன்
இசை: D. இமான் பாடலாசிரியர்: கார்த்திக் நேதா ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா
படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன் கலை: B. சேகர் சண்டை: ஓம் பிரகாஷ் வசனம்: M.R. அருண் சந்தர் உடை: K. நட்ராஜ் ஒப்பனை: “அறந்தை” தினேஷ் தயாரிப்பு நிர்வாகம்: K. சின்னதுரை, R. ராஜாராம் நிர்வாகத் தயாரிப்பு: மதி ஆனந்தன் தயாரிப்பு மேற்பார்வை: S. அழகர்சாமி இணை தயாரிப்பாளர்: L. சுந்தரபாண்டி ஒலிகலவை: T. உதயகுமார் சப்தம்: விஷ்ணு நிழற்படம்: திலீப் குமார் விளம்பர வடிவமைப்பு: சின்னா சுரேஷ்
மக்கள் தொடர்பு: A. ராஜா