டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. காணொளி முழுவதும் விறுவிறுப்பான சண்டை காட்சிகளால் நிரம்பியுள்ளது. காணொளியில் இருந்து ‘பள்ளிச்சட்டம்பி’ மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.*******
இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான ‘காட்டு செம்பகம்’ பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

