காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் “லவ் ஓ லவ்” திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதாகையை விஜய் சேதிபதி வெளியிட்டார். இந்த படத்தில் பவிஷ் நாராயணன், நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தினேஷ் ராஜ், ஜி.தனஞ்செயன் ஆகியோரின் தயாரிப்பில், மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். படத்தின் மற்ற முக்கிய அம்சமாக இயக்குநர்களான செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வனிதா விஜயகுமார் , ஆதித்யா கதிர், ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.******
இப்படத்திற்கு மேலும் புத்துணர்ச்சி சேர்க்கும் வகையில், வடசென்னையைச் சேர்ந்த திறமையான இசையமைப்பாளர் ஜோடி FOXn இசையமைக்கின்றனர். இதில் பிரதீப் PJ மற்றும் வேயின் பாவே ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களின் தனித்துவமான மற்றும் பரிசோதனையான இசை பாணி, படத்திற்கு உணர்ச்சி மற்றும் இளமை நிறைந்த இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை P. G. முத்தையா மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற N. B. ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்குநராக P. மகேந்திரன் பணியாற்றுகிறார். இப்படம் வலுவான தொழில்நுட்பக் குழுவின் ஆதரவுடன் உருவாகி வருகிறது.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், Post Production பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. Love Oh Love திரைப்படம் 2026 கோடை அன்று திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இளமை, உணர்ச்சி மற்றும் நவீன கால உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு புதுமையான காதல் திரைப்படமாக Love Oh Love உருவாகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டிருப்பது, ரசிகர்கள் மற்றும் திரையுலகில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. மக்கள் தொடர்பு (PRO): ரேகா

