பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி ஆகியோர் நடித்துள்ளார்கள்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளிவருகிறது. மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே ‘சின்ன சின்ன ஆசை’. *****
இந்திரன்ஸ், மதுபாலா நடிக்கும் ‘சின்ன சின்ன ஆசை’
