கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரன் அவர்கள் உள்பட மாகாண தொகுதியின் அங்கத்தவர் நடத்திய கனடா தின ஒன்றுகூடல்

மாகாண அரசு தொகுதியின் அங்கத்தவரும் அமைச்சு ஒன்றின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி அவர்கள் நடத்திய கனடா தின ஒன்றுகூடல் கடந்த 29-06-2026 அன்று திங்கட்கிழமை மார்க்கம் நகரில் 15 Simonston Blvd. Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Simonston பூங்காவில் சிறப்பாக ஏற்பாடு செய்ய்பெற்றிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் நலன் விரும்பிகளும் அங்கு கலந்து கொண்டு அங்கு இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவு உபசாரங்கள் ஆகியவற்றில் பங்கெடுத்தனர். பரதநாட்டியம் – சீனக் கலாச்சார நடனங்கள் மற்றும் ஏனைய இனங்கள் சார்ந்த கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெற்றன. அங்கு உரையாற்றிய Markham – Thornhill மாகாண அரசு தொகுதியின் அங்கத்தவர் லோகன் கணபதி அவர்கள் கனடா தேசத்தில் எமது மார்க்க்ம் நகரின் பிரதேசம் நன்கு அபிவிருத்தியடைந்த ஒரு பிராந்தியமாக மாறி வருகின்றது.கனடாவில் உலகின் பல பாகங்களிலும் பிறந்து வளர்ந்த பல்லின மக்கள் அவர்கள் சொந்த மொழியை பேசுபவர்களாக இருந்தாலும் இந்த நாட்டில் தங்களால் இயன்ற அளவிற்கு வாழ்க்கையிலும் கல்வியிலும் மேன்மையடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றார். கனடாட உதயன் பிரதம ஆசிரியர் அவர்களும் ஈஸ்ட் எப்எம் 102.7 வானொலி நிலையத்தின் தலைவர் நடா ராஜ்குமார் அவர்களும் தமது குழுவினரோடு அங்கு கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது