சத்தியஜோதி பிலிம்ஸ் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் டிடி. பாலசந்திரன் இயக்கத்தில் கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், சிரிடாராவ், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிசந்திரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லெனின் பாண்டியன்”. சிவகங்கை காவல் நிலையத்தில் கடைநிலை காவளாராக பணியாற்றுகிறார் தர்ஷன் கணேசன். அவரை ஒன்றுக்கும் உதவாத காவலர் என்று மற்ற காவல்ர்கள் கேலி செய்கிறார்கள். பல அவமானங்களை சகித்துக் கொள்கிறார். இது ஒருபுறமிருக்க கணவன் மனைவியான கங்கை அமரனும் ரோஜவும் மீனாட்சி என்ற ஒரு ஆட்டை குழந்தைபோல் வளர்த்து வருகிறார்கள். ஒருநாள் அந்த ஆடு மணல் கொள்ளை லோரியில் அடிபட்டு இறந்து விடுகிறது. இதுகுறித்து மணல் கொள்ளை மாபியான யுகேந்திரன் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார். இவரது புகாரை காவல் ஆய்வாளர் போஸ்வெங்கட் ஏற்க மறுத்ததோடு இல்லாமல் கங்கை அமரனை அடித்து துரத்தி விடுகிறார். அதனால் கங்கை அமரன் நீதிமன்றம் செல்கிறார். நீதிபதியாக இருக்கும் ஜார்ஜ் மரியான் வழக்கை துரிதபடுத்தும்மாறு காவல்த்குறைக்கு உத்தரவிடுகிறார். அத்துடன் புகாதாரர் கங்கை அமரனுக்கு பாதுகாவலராக காவலர் தர்ஷன் கணேசனை நியமனம் செய்து நீதிபதி ஜார்ஜ் மரியான் உத்தரவிடுகிறார். வில்லன் யுகேந்திரனிடமிருந்து கங்கை அமரனை தர்ஷன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் கதை.
கங்கை அமரன் தனது கதாபாத்திரத்தை மிகவும் இலகுவாக கையாண்டிருக்கிறார். அலட்டிக் கொள்ளவே இல்லை. நையாண்டி பேச்சும் அடிவாங்கும்போது துடித்து பதறுகின்ற காட்சியிலும் ஒரு கிராம வாழ்க்கைக்கே படம் பார்ப்பவர்களை இழுத்து சென்றுவிடுகிறார். ரோஜா, அவரது மனைவியாக சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். தர்ஷன் கணேசன், சாதாரண காவலராக இருந்து பொறுப்பை உணரும் கதாபாத்திரத்தின் மாற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கும் மனைவியை கையிலெடுத்து அழுகின்ற காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்பதை நிருபித்துவிட்டார். அப்படியொரு நடிப்பு. தர்ஷன் கணேசனின் நடிப்பு. வாழ்த்துக்கள் தர்ஷன். கொடுமைபடுத்தும் காட்சியில் போஸ் வெங்கட் உச்சம் தொட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் போஸ் வெங்கட்டை பார்த்து நீதிபதி ஜார்ஜ் மரியான் “யோ போலீசு” என்று கூப்பிடும் காட்சியில் திரையரங்கமே சிரிப்பில் அதிர்கிறது. டாக்டர் அம்பேத்காரின் மனநிலையை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார் ஜார்ஜ் மரியான். யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். மணல் கொள்ளையை மையமாக வைத்து சமூகப் பிரச்சனையையும், ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தையும் இணைத்து இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் படத்தை இயக்கியிருப்பது அவரின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. இளையராஜாவின் இசை படத்துக்கு உயிர்மூச்சாக அமைந்திருக்கிறது. ஒரு கிராமத்த்கையே தன் கைவண்ண்த்தில் உருவாக்கியிருக்கும் கலை இயக்குநர் அத்தூரி ஜெய்க்குமார் உணமையிலேயே போற்றதலுக்குறியவர். காவல் நிலையத்தையும்
கருப்பசாமி கோவிலையும் அழகாக செதுக்கியிருக்கிறார். கிராமத்தின் மண்வாசனையை திரையரங்கில் பரவச் செய்த்திருக்க்றார் ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே.

