நூறு கோடி வானவில் திரைப்பட விமர்சனம்

பாலாஜி கபா, அருண் அருணாச்சலம்  ஆகியோரின் தயாரிப்பில் சசி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் நூறு கோடி வானவில். மும்பையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் உண்மை நிகழ்வுகளை குறும்படமாக தயாரிக்கும் வேலைபார்த்து வருகிறார் ஹரிஸ் கல்யாண். அதற்காக கோவாவுக்கு வருகிறார். கோவாவில் சித்தி இத்னானி சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். அத்துடன் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டுமென்ற தனது ஆசையையும் அதே நேரத்தில் கோமாவிலிருக்கும் தனது காதலனின் மருத்துவச் செலவுக்காகவும் ஹரிஸ் கல்யாண் எடுக்கும் குறும்படத்திற்காக அவரிடம் வேலை பார்க்கிறார் சித் இத்னானி.ஆனால் ஹரிஸ் கல்யாத ஒருதலை பட்சமாக சித்  இத்னானியை காதலிக்கிறார். சித் இத்னானி கோமாவிலிருக்கும் தனது காதலனின் மருத்துவச் செலவுக்காத்தான் தன்னிடம் வேலை பார்க்கிறார் என்ற செய்தி ஹரிஸ் கல்யாண்னுக்கு தெரிய வருகிறது. சித் இத்னானி காதலனும் பூர்ண குணமடைந்து வீடு திரும்புகிறார்.இப்போது சித் இத்னானியை யார் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.

 இதுவரை மேலோடடமாக நடித்து வந்த ஹரிஸ் கல்யாண் இப்படத்தில் அழுத்தமான காபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். உணர்ச்சிகரமான நடிப்பை அவரது முகம் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. இறுக்கமான முகத்துடன காணப்பட்டாலும்  கதாபாத்திரத்துக்கு அது மிகவும் தேவையானதாக இருக்கிறது.  கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்களின்   மனதில் நிறைந்துவிடுகிறார்.  சித் இத்னானியின் கன்னக்குழி  மதுக்கிண்ணம்போல் இளசுகளை கவர்கிறது. உச்சக்கட்ட காட்சியில் தாராளமான நெருக்கத்தில் நடித்திருக்கிறார். காதலனுக்காக ஏங்குவதிலும் ஹரிஸ் கல்யாண்னின் பிரிவை தாங்கமுடியாமல்  தவிப்பதிலும் கொட்டு மேளம் இருபக்கமும் அடிவாங்குவது போல சித் இத்னானி தனது முழக் கவனத்தையும் செலுத்தி நடித்திருப்பது பாராட்டதலுக்குறியது.காதலனாக வரும் ரிச்சி எந்த பக்கமும் அசையாமல் தனது காதலுக்காகவே போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். கோவை சரளா, தம்பி ராமைய்யா , சின்னி ஜெயந்த், சம்பத்ராம் ஆகியோரின் கதாபாத்திரங்கள் தனியாக  தனி ஆர்வத்தனம் போடுகிறது. கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவும் சித்து குமாரின் இசையும் கதைக்களத்தோடு இணைந்து ஒன்றிப்போயிருக்கின்றன.இது ஒரு முக்கோணக் காதல் படம்.  அதன் முனை எதுவும் சேதமில்லாமல் படத்தை செதுக்கி இருக்கிறார் இயக்குநர் சசி. காலம் கடந்துவந்த படம். ஆனால் காலத்தால் அழியாத படம்.திரைக்கு வராதபடம் இணைய தளத்தில் அரங்கேறியிருக்கிறது