“ஓம்” திரைப்பட விமர்சனம்

தனுஷ், ஷ்ரத்தா அகர்வால், அஸ்மத் ஜக்மாக் ஆகியோரின் தயாரிப்பில்,  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஓம்”.  ஆந்திரா காடுகளில் செம்மரங்களை வெட்டி தமிழ்நாட்டின் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தும் வேலையை செய்து வருகிறார் மம்முட்டி. செம்மரக்கடத்தல்காரர்களை சிறைபிடிக்க சாய்பல்லவியின் கீழ் ஒரு சிறப்பு அதிரடி காவல்படையை ஆந்திரா அரசு அமைக்கிறது.. தமிழக காவல்துறையில் சிறப்பு அதிரடிப்படையில் இருக்கும் தனுஷ், ஆந்திர காவல்படையுடன் சேர்ந்து மம்முட்டியை திட்டமிடுகிறார். அதன்படி மம்முட்டியின் திட்டங்களை அறிந்துகொள்ள அவரிடமே நண்பராக நடித்து மம்முட்டியை உளவு பார்க்கிறார் தனுஷ். ஒருகட்டத்தில் தனுஷின் தந்தை இந்திரனை ஆந்திரா போலீஸ் சுட்டுக் கொல்ல நேரிடுகிறது. இதனால் வெகுண்டெழும் தனுஷ் தன்னை நியமித்த காவல் படைக்கு எதிராகவே களமிறங்குகிறார். அதன்பிறகு என்ன ஆனது? யார் கை ஓங்கியது? என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு துறுதுறுப்பான, அதே சமயம் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தனுஷ் மிளிர்கிறார். குறிப்பாக அவரது அறிமுகக் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளில் இளமையின் துள்ளலாக முந்திய படங்களில் நடித்த தனுஷாக இப்படத்தில் பார்க்க முடிகிறது. மம்மூட்டியின் அனுபவ நடிப்பு படத்திற்குப் பெரும் பலம். வில்லன் கதாபாத்திரத்தையும் படம் பார்ப்பவர்களின் மனதை குளிர்விக்கும் விதமாக முரட்டுத்தனம் இல்லாத வில்லனாக காட்சி தருகிறார். இந்திய காவல்பணியின் உச்சபட்ச அதிகாரியாக சாய்பல்லவி மிரட்டியுள்ளார். கம்பீரமான காவல் அதிகாரியாக இப்படத்தில் அவர் மிளிர்கிறார். ஸ்ரீலீலா, பிரசன்னா, இந்திரன்ஸ், ரேணு தேசாய் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.. எழில் அரசுவின் ஒளிப்பதிவும் சாய் அபயங்கரின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. பரபரப்பான திரைக்கதை படத்துக்கு பலம். வழக்கமான செம்மரக்கட்டை கடத்தல், போலீசார் நடவடிக்கை என்ற ரீதியில் கதை பயணித்தாலும், விறுவிறுப்பான காட்சிகள் மூலம் படம் முழுக்க கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இடைவேளையும், கிளைமாக்ஸ் காட்சியும் பரபரப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறது.