சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”. இப்படத்தில் விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்க ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு குத்து பாடலை இயக்குநர் ஆதிராஜன் எழுதியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலின் பாரில் நடனமங்கை ஒருத்தி அனைத்து விதமான மதுபானங்களையும் தன் உடலோடு ஒப்பிட்டு பாடுவது போன்று அந்த பாடலை எழுதியுள்ளார். ஸ்ரீநிஷா சீனிவாசன் பாடி இருக்கிறார். மேக்னா நாயுடு இந்த பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். எம்.ஜி கார்த்திக் இசையில் உருவான இந்த பாடலுக்கு மாஸ்டர் சிவகுமார் நடனம் அமைத்திருக்கிறார்.*******
பல பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிஓவியம் தீட்டிய ராஜேஷ் கே நாராயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை “கேஜிஎப்” படப்புகழ் ஸ்ரீகாந்த் கையாண்டிருக்கிறார். மற்ற பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார். விறுவிறுப்பான அதிரடி படமாக உருவாகி இருக்கும் “தீராப்பகை” விரைவில் திரைக்கு வருகிறது.

