தந்தை வழியில் பயணிக்கும் முதல்வர்! தமிழக முதலமைச்சருக்கு இந்திய அசோஷியேஷன் நன்றி

2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு விமானம் சென்னையிலிருந்து இயக்கப்படாமல் கொச்சியில் இருந்து இயக்கப்படுவது பெரும் சிரமத்தைக் கொடுத்து வருகிறது.இது குறித்து பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.வழக்கமாக சென்னையிலிருந்து விமானம் இயக்கப்படும் போது ஏராளமான ஹஜ் பயணிகளுக்கு செல்வதற்கு வசதியாக இருந்தது.ஆனால் தற்போது ஹஜ் செல்ல கொச்சி விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுவது தமிழக ஹஜ் பயணிகளுக்கு பெரும் தூரமாகவும் பாரமாகவும் அமைந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சென்னையில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் செல்வதற்கான விமானத்தை இயக்குவது குறித்து உடனடியாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஹஜ் பயணிகளுக்கும் மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுபான்மை மக்களின் காவலனாக இருக்கும் தமிழக முதலமைச்சர் எப்போதும் தந்தையைப் போலவே மகனும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இஸ்லாமியர்கள் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.இந்த நேரத்தில் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்.

இப்படிக்கு
பிரசிடெண்ட் அபுபக்கர் தலைவர்
இந்திய ஹஜ் அசோசியேஷன் புது தில்லி