சர்வதேச விருதுக்கான பட்டியலில் ‘ஜவான்’திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவர்அனல்அரசு ஆவார். தமிழில் சிங்கம்-1,சிங்கம்-2, கத்தி, மெர்சல்,பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர் மற்றும் அடுத்துவெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில்பாலிவுட் பாட்ஷா‘  என்றழைக்கப்படும்ஷாருக்கான்நடிப்பில், ‘அட்லிஇயக்கத்தில், ‘அனிருத்இசையில், ‘அனல்அரசு  சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய  ‘ஜவான்திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து,*******

அதற்கான  விருதுகளையும் வென்றிருக்கிறார். சமீபத்தில்ஜவான்திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதுகள்2024-லும்,ஜீ சினி விருதுகள் 2024-லும் விருதுகளை வென்றுள்ளார். அனைத்திற்கும் உச்சமாக திரைப்படசண்டை பயிற்சி துறைக்குஆஸ்கர் விருதுபோன்ற ஒரு விருதானடாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட்விருதுகளுக்கான(Taurus World Stunt Awards) பட்டியலில் ஜான்விக் சாப்டர்-4, மிஷன்: இம்பாசிபிள்டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன்-2, பேல்லரினா போன்றதிரை ப்படங்களுடன்ஜவான்‘  திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது மட்டும் அவருக்கு கிடைத்தால், அவரது மணிமகுடத்தில் ஒரு வைரமாக மாறும்.