குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

T16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்எஸ்.ஹரிகிருஷ்ணன் (த.கா.26191) மற்றும் ஊர்க்காவல் படைகாவலர் கே.அஸ்வின்குமார் (HG 5037) ஆகியோர் 03.7.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார்03..00 மணியளவில் (04.7.2021) நசரத்பேட்டை சிக்னல் அருகில்சந்தேகத்திற்கிடமாக 2 பல்சர் இருசக்கர வாகனங்களில் சென்ற 3 நபர்களை நிறுத்தியபோது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றனர். உடனே, காவலர்கள் இருவரும், பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்தமற்றொரு நபரை மடக்கிப்பிடித்து, அவர் இடுப்பில் மறைத்துவைத்திருந்த ஸ்குரூ டிரைவர் மற்றும் கட்டிங் பிளேயரைஎடுத்தபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு, காவலர்களை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அவ்வழியேமற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த T-16 நசரத்பேட்டைகாவல் நிலைய காவலர் வி.எம்.ஏகாம்பரம் (கா.51419) என்பவரும்காவலர்களுடன் சேர்ந்து தப்ப முயன்ற நபரை மடக்கிப்பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் விஜய்,வ/24, த/பெ.லோகநாதன், ரெட்டிதோப்பு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் என்பதும், விஜய்தப்பிச் சென்ற அவரது 2 நண்பர்களுடன் ஒரே பல்சர் இருசக்கரவாகனத்தில் சென்னைக்கு வந்ததும், நள்ளிரவு பூந்தமல்லியில்நோட்டமிட்டு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள ஒருவீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு பல்சர் இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு, விஜய் அவரது இருசக்கரவாகனத்திலும், நண்பர்கள் இருவரம் திருடிய இருசக்கரவாகனத்திலும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில்நசரத்பேட்டையில் விஜய் பிடிபட்டதும் தெரியவந்தது. உடனே, தலைமைக் காவலர் ஹரிகிருஷ்ணன், இரவு ரோந்துபணியிலிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.கோவிந்தராஜன்அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு 2 நபர்கள்செல்வதாக தகவல் கொடுத்ததின்பேரில், காவல் ஆய்வாளர்திரு.கோவிந்தராஜன், தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றுகண்காணித்தபோது, 2 நபர்கள் மாம்பாக்கம், Saint Gobainநிறுவனம் அருகில் திருடிச் சென்ற பல்சர் இருசக்கர வாகனத்தைபோட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், மற்றொரு பல்சர் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இருசக்கர வாகனம் பூந்தமல்லி பகுதியில்திருடப்பட்டதால், பிடிபட்ட குற்றவாளி விஜய், பறிமுதல்செய்யப்பட்ட 2 பல்சர் இருசக்கர வாகனங்கள், ஸ்குரூ டிரைவர்மற்றும் கட்டிங் பிளேயருடன் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.  அதன்பேரில் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின்னர் எதிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். ​ 2. அமைந்தகரை பகுதியில் வீட்டிலுள்ள சிலிண்டரில் பற்றியதீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக்காவலர்  ​சென்னை, அமைந்தகரை, எம்.எம்.காலனி, எண்.28 என்ற முகவரியில் வசிக்கும் நாராயணன் என்பவரின் மகள்கடந்த 03.7.2021 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில், வீட்டின் வெளியே வாசலில் மண்ணெண்ணெய் அடுப்பைபற்ற வைத்தபோது, வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டரில்வாயு கசிந்து இருந்ததால், அடுப்பிலிருந்த தீ வீட்டிற்குள்பரவி வீட்டினுள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரியஆரம்பித்தது. உடனே, நாராயணன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், K-3 அமைந்தகரை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்புதலைமைக் காவலர் சரவணன் (த.கா.42734) சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று, வீட்டில் பார்த்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டரும் தீபிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே தலைமைக் காவலர்சரவணன், ஒரு துணியை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் மீது மூடி சிலிண்டரில்பற்றிய தீயை அணைத்து, சிலிண்டரை வீட்டிற்கு வெளியேகொண்டு வந்து போட்டார். இதனால் பெரும் அசம்பாவிதம்நிகழாமல் தடுக்கப்பட்டது. இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு இருசக்கரவாகனத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த T-16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர்ஹரிகிருஷ்ணன், காவலர் ஏகாம்பரம், ஊர்க்காவல் படைகாவலர் அஸ்வின்குமார் மற்றும் K-3 அமைந்தகரை காவல் நிலைய தலைமைக் காவலர் ஆகியோரை சென்னைபெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப.,  நேரில் அழைத்துபாராட்டி வெகுமதி வழங்கினார்.

குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ஏர் அரேபியா விமானம் ஜி9-471மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய திருவாவூரை சேர்ந்த கலையரசன் கருணாநிதி, 31, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர். அவரை சோதனையிட்ட போது, அவரது உடலில் …

ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது Read More

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள போதை பவுடர் மற்றும் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.  தகவல் அடிப்படையில், சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இரு பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றி சோதனை …

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல் Read More

31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது

உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின்அடிப்படையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்றவிமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலன்(27) என்பவர் தங்கம் கடத்தி வரக்கூடும் என்ற சந்தேகத்தின்பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறைஅதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 715 கிராம் எடையிலானதங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்கள் அவரது உடலில்மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுங்கச் சட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பில்மொத்தம் 633 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து தங்கத்தைப் பெறவிருப்பவரைகண்டறிவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வெளியேஅழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரைத் தேடி வந்த நபரும் பிடிபட்டார். ராமநாதபுரத்தைச்சேர்ந்த முஹம்மது உவைஸ் (23) என்ற அந்த நபர் இந்தகடத்தலில் தமது பங்கையும் ஒப்புக்கொண்டார். இருவரும்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 31 லட்சம் மதிப்பில் மொத்தம் 633 கிராம்தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது Read More

கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார்

16 நசரத்பேட்டை காவல் நிலையதலைமைக்காவலர்    T.சீனிவாசன் (த.கா.35312) என்பவர் (1.7.2021) காலை 10.15 மணியளவில்  நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டபாப்பான் சத்திரம், பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை, சிவன்கோயில் அருகே ரோந்து சென்று கொண்டிருந்த போது, அங்குஇருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்த போதுஅவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது, கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில்இருவரையும் கைது செய்து  T-16 நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.​T-16 நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்டநபர்கள் 1.தேவேந்திர நாத்கொகோய், , வ/31,  த/பெ.அகன்சந்திரகொகோய், சன்டியா தாலுக்கா, டின்சுகியா மாவட்டம்அஸ்ஸாம் 2.அன்டார்யாமி மஹாலிக், வ/23, த/பெ.பிரபாகர்மஹாலிக், கல்யாண்பூர், பலேஸ்வர், ஓடிசா மாநிலம்  ஆகியஇருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1,24,320/-, 3 செல்போன்கள்மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படிஇருவரும்  நசரத்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ளபகுதிகளில் கஞ்சா  விற்பனை செய்தது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுநீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.  ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு கஞ்சாவிற்பனை செய்த  2 வெளிமாநில குற்றவாளிகளைகைது செய்த T-16 நசரத்பேட்டை காவல்நிலையதலைமைக்காவலர் T.சீனிவாசனை,  சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 02.7.2021 நேரில் அழைத்து பாராட்டிவெகுமதி வழங்கினார். 

கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார் Read More

காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப 30.6.2021 பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு, காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) M.ரவி, …

காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. Read More

திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பாஸ்கர் பதவி ஏற்பு.

சென்னை மாநகர காவல்துறையின் பத்திரிக்கை தொடர்பு உதவி ஆணையராக பதவி வகித்து வந்த பாஸ்கர், சென்னை திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்ற பாஸ்கர் சென்னை திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்.

திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பாஸ்கர் பதவி ஏற்பு. Read More

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல்

காவலர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக காவல்த்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பில் பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை …

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல் Read More

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ்

ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா. ராமமூர்த்தி. ராமமூர்த்தி, எர்த் மூவர்ஸ் என்ற …

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ் Read More

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வணையம் 3 பேர் கொண்ட பட்டியல் அனுப்பிய இருந்தன் அடிப்படையில், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை …

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் Read More