திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறையின் கூட்டரங்கில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினைப் பழமைமாறாமல் புதுப்பித்தல் தொடர்பான பெருந்திட்ட ஆய்வுக்கூட்டம் 17.07.2021 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு,மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்றஉறுப்பினர் திருமதி.கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எச்.சி.எல் நிறுவனத்தினால் நியமனம்செய்யப்பட்ட கட்டிடக்கலை வல்லுனர்களால்திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலினைப் பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும்பெருந்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகள் தொடர்பான முதல்கட்டவிளக்கக் காட்சியில் திருக்கோயிலின் கட்டுமானம், பக்தர்களின் அடிப்படை வசதிகள், முக்கிய திருவிழாக்காலங்களில் அதிகப்படியான பக்தர்களைஈர்க்கும் வகையில் மேலாண்மை செய்தல், காற்றோட்டவசதிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் கலந்தாய்வுசெய்யப்பட்டன. இத்திருக்கோயில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்பல்வேறு பகுதிகளாகப் பிரித்து செயல்பட வேண்டியுள்ளது.குறிப்பாகத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின்பயன்பாட்டிற்காக அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை, மின்னாளுமை, வாகனம் நிறுத்தும்இடங்கள், ஒளியமைப்பு இவைகளை அதிக செலவின்றிதரமானதாக அமைத்தல் மற்றும் மின் சிக்கனத்தையும்கருத்தில் கொள்ளுதல், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபின்னர் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பக்தர்கள் வரிசையில் ஓய்வெடுப்பதற்கான இடங்களில்கழிப்பறை, குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டஅனைத்து வசதிகள் இப்பெருந்திட்டத்தில் இடம்பெறவேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தில் அதிகளவிலான திருமணங்கள்ஒரே நாளில் திருக்கோயிலில் நடைபெறும் போது அவற்றைமேலாண்மை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில்இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார்வாகனங்கள் ஓர் இடத்தில் முறைப்படுத்தப்பட்டு அங்குஇருந்து திருக்கோயிலுக்கு மினி வாகனம் இயக்கப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில் வசிக்கும்மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மேற்படிதிட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரைகள்வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மைச் செயலாளர், முனைவர்பி.சந்திர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர், ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல்ஆணையர், திரு.கண்ணன், இ.ஆ.ப., திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தக்கார், திரு.கண்ணன், விளாத்திகுளம், சட்டமன்ற உறுப்பினர வி.மார்க்கண்டேயன், எச்.சி.எல் நிறுவன கட்டிடக்கலைவல்லுனர் திருமதி.ஸ்ரீமதி உட்பட பல அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம். Read More

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி

டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது.  54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும்இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள்  உட்பட 88 பேர்கொண்ட அணியினரை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர்  திரு நிசித் பிரமணிக் ஆகியோர்முறைப்படி வழியனுப்புகின்றனர்.  இந்த வழியனுப்புவிழாவில்,  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரேந்தர்துருவ் பத்ரா, பொதுச் செயலாளர்  திரு ராஜீவ் மேத்தாமற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமைஇயக்குனர் திரு சந்தீப் பிரதான்   ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வில் அம்பு, ஈட்டி எறிதல், ஹாக்கி, பாட்மின்டன், டேபிள்டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் பளுதூக்குதல்ஆகிய 8 போட்டிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் புதுதில்லியிலிருந்து இன்றுபுறப்படுகின்றனர். இதில் மிகப் பெரிய அணி ஹாக்கி. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்துபிரமுகர்களுக்கும் கொவிட் பரிசோதனை செய்து கொள்வர். சமூக இடைவெளி முறைகளும் இந்நிகழ்ச்சியில்பின்பற்றப்படும்.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, 127 இந்தியவிளையாட்டு வீரர்கள், தகுதி பெற்றுள்ளனர்.  ரியோஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட இவர்கள்அதிகம் என்பதால், இந்த எண்ணிக்கை  சாதனையாகஉள்ளது.

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி Read More

பாப் நட்சத்திரங்கள் பாடல் வெளியீடு

பாப் நட்சத்திரங்கள் ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் ஆகியோர் ஏடிஜி & கைபா பிலிம்ஸுடன் இணைந்து ‘என்டூரேஜ்’ பாடலை வெளியிட உள்ளனர் நடிகர் நெப்போலியன் மற்றும் இசையமைப்பாளர்-நடிகர் ஜி வி பிரகாஷ் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய கெய்பா இன்க் தலைவரான …

பாப் நட்சத்திரங்கள் பாடல் வெளியீடு Read More

சென்னையின் அதி நவீன சவுண்ட் ஸ்டூடியோ

தரமான சவுண்ட் ஸ்டூடியோவுக்கான தேவை சென்னையில் இருப்பதை கருத்தில் கொண்டு, சவுண்டபிள் எனும் அதி நவீன ஒலியகத்தை வடபழனியில் தொடங்கி உள்ளார் இசை அமைப்பாளர் சக்தி பாலாஜி என். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக செயல்பாட்டில் உள்ள போதும், கொவிட்-19 பெருந்தொற்று …

சென்னையின் அதி நவீன சவுண்ட் ஸ்டூடியோ Read More

சித்திரை பாண்டியன் இல்லத் திருமண விழா; விக்கிரமராஜா வாழ்த்து!

சென்னை, ஜூலை. 16: தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் மார்கெட் வியாபாரிகள் சங்க பொருளாளர் சி. சித்திரை பாண்டியன், இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து …

சித்திரை பாண்டியன் இல்லத் திருமண விழா; விக்கிரமராஜா வாழ்த்து! Read More

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு!

செங்கல்பட்டு, ஜூலை. 16: சென்னையின் குடிநீர் தேவைக்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி திறன் கொண்ட …

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு! Read More

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்!

செங்கல்பட்டு, ஜூலை. 17: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்த குப்பைகளை அகற்றுவதற்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.பவுடன், …

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்! Read More

இயக்குனர் டீகேயின் ‘கருங்காப்பியம்’

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் …

இயக்குனர் டீகேயின் ‘கருங்காப்பியம்’ Read More

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

*மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் உலக நாடுகளிடையே நிலவிவரும் நிலையில், மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை …

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! Read More

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘ட்ரீம் ஹவுஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படத்தில் நான்கு நாயகிகள் …

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. Read More