ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த சியான் விக்ரம்

சியான்விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீரசூரன்என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் பதாகை மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சியான் காணொளி ஆகியவை வெளியாகிஉள்ளதால் ரசிகர்கள் இரட்டை விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருகிறார்கள்.  இயக்குநர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீரசூரன்எனும் திரைப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.********

தேனி ஈஸ்வர்ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்குஇசை அசுரன்ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

சியான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் இப்படத்தின் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு  ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு.., தற்போது படத்தின் நாயகனான சியான்  விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, வீரதீரசூரன்எனும் படத்தின் டைட்டிலையும், இந்த படத்தில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் காளி எனும்கதாப்பாத்திரத்திற்கான சிறப்பு காணொளியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.