ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும், பேபி & பேபி

ஜி.பி.எஸ்.கிரியேஷன் சார்பில் ஜி.பி.செல்வகுமார் தயாரிப்பில்நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில்,பிரதாப் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. இப்படத்தில் ஜெய் நாயகனாக  நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை கீர்த்தனா செல்வகுமார், . நடிகை பிரக்யா. நாக்ரா, ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசுஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார்.**********

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுவருகிறது.

GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணிஇசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். T.P. சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், தயாரிப்பாளர் G.P. செல்வகுமார் இணைந்து  இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

தொழில் நுட்ப குழு இயக்கம்பிரதாப் இசை – D. இமான் ஒளிப்பதிவு – T.P. சாரதி எடிட்டர் – K ஆனந்தலிங்ககுமார்